மும்பையில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காவலர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மும்பையில் இதுவரை கரோனா தொற்றால் 8 ஆயிரத்து 716 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 48 மணி நேரத்தில் இரண்டு காவலர்கள் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று (மே.09) ஒரே நாளில் 48 ஆயிரத்து 401 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 60 ஆயிரத்து 226 பேர் குணமடைந்துள்ளனர். 572 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பையில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 15 ஆயிரத்து 783. இதுவரை 75 ஆயிரத்து 849 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 44 லட்சத்து 7 ஆயிரத்து 818 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லியில் இலவசமாக ஆயுஷ் 64 மருந்து விநியோகம்!