ETV Bharat / bharat

மைத்ரி பாக் பூங்காவில் பிறந்து 2 மாதங்களான வெள்ளைப் புலிக்குட்டி விடுவிப்பு!

சத்தீஸ்கரில் உள்ள மைத்ரி பாக் உயிரியல் பூங்காவில் பிறந்து இரண்டு மாதங்களே ஆன வெள்ளைப் புலிக்குட்டி, அதன் கூட்டத்தில் விடப்பட்டது.

author img

By

Published : Nov 9, 2022, 3:22 PM IST

month
month

பிலாய்: சத்தீஸ்கர் மாநிலம், பிலாய் மாவட்டத்தில் உள்ள மைத்ரி பாக் உயிரியல் பூங்காவில், பிறந்து இரண்டு மாதங்களே ஆன "சிங்கம்" என்ற வெள்ளைப் புலிக்குட்டி அதன் கூட்டத்தோடு விடுவிக்கப்பட்டது.

இதுகுறித்து மைத்ரி பாக் உயிரியல் பூங்காவின் பொறுப்பாளர் என்.கே. ஜெயின் கூறுகையில், "கரோனா பெருந்தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புலிகளின் இனப்பெருக்கம் நிறுத்தி வைக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் புலியையும், பெண் புலியையும் கொண்டு வந்து இணை சேர்த்ததில், செப்டம்பரில் புலிக்குட்டி பிறந்தது. அதற்கு 'சிங்கம்' என்று பெயரிட்டோம். குட்டி ஆரோக்கியமாக உள்ளது" என்று தெரிவித்தார்.

அதேபோல், கடந்த அக்டோபர் மாதத்தில் மேற்குவங்க மாநிலம், சிலிகுரி அருகே உள்ள சபாரி உயிரியல் பூங்காவில், பிறந்து ஆறுமாதங்களான நான்கு புலிக்குட்டிகள் பழக்கப்படுத்துவதற்காக திறந்தவெளி அடைப்பில் விடுவிக்கப்பட்டன.

இந்தப் பூங்காவில் சுமார் 6 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஷீலா என்ற பெண்புலி, கடந்த மார்ச் மாதம் நான்கு குட்டிகளை ஈன்றது. மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, இந்த குட்டிகள் பெரிய திறந்தவெளி அடைப்பில் விடுவிக்கப்பட்டன.

முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம், நமீபியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட எட்டு சிவிங்கிப் புலிகள், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: சிவிங்கி புலிகள் விரைவில் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.