ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீர் பகுதியிலுள்ள அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இது குறித்துப் பேசிய காவல் துறையினர், ”பயங்கரவாதிகள் ஊடுருவல் பற்றி தகவல் வந்ததையடுத்து ஆர்ஆர் பிரிவைச் சேர்ந்த ராணுவத்தினர், மத்திய பாதுகாப்பு படையினர், காவல் துறையினர் இணை குழுவினர் ஆகியோர் இணைந்து பாதுகாப்பு வளையம் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம். பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தைக் கண்டறிந்தவுடன் துப்பாக்கி சூடு நடத்தினோம்.
இதில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது அந்தப் பகுதியில் தீீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஐம்மு காஷ்மீரிலுள்ள ராஜோரி அருகே இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் இருவரின் முயற்சி ராணுவத்தினரால் முறியடிகப்பட்டது. அப்போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலை தொடர்ந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காஷ்மீர் என்கவுன்டர்: ஒரேநாளில் சுட்டு வீழ்த்தப்பட்ட 5 பயங்கரவாதிகள்