ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் ரஜௌரி மாவட்டத்தின் நௌஷேரா பகுதியில் ராணுவ வீரர்கள் இன்று (அக். 30) கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவந்தனர். அப்போது, அங்கு புதைந்திருந்த கண்ணிவெடி மீது தவறுதலாக கால்வைத்து வெடித்து இந்திய ராணுவத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, சிகிச்சையின் போது லெஃப்டினன்ட் ரிஷி குமார், சிப்பாய் மஞ்சித் சிங் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். மற்றொருவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
ரிஷி குமார் பிகாரைச் சேர்ந்தவர் என்றும், மஞ்சித் சிங் பஞ்சாப்பை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: NRCB அறிக்கை - தற்கொலைகளில் தமிழ்நாடு 2ஆம் இடம்