அசாம் மாநிலம், நாகான் மாவட்டத்தில் கத்தியடோலி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், 18 யானைகள் இறந்த நிலையில் கிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த வன அலுவலர்கள், உடலை மீட்டு விசாரணை நடத்தினர். யானைகளின் இறப்பு குறித்த சரியான காரணம் தெரியவில்லை.
முதற்கட்ட விசாரணையில், மின்னல் தாக்கியதில் யானைகள் இறந்திருக்கலாம் என வனத்துறை சந்தேகிக்கின்றனர். ஏனென்றால், அப்பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. உடற்கூராய்வுக்குப் பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில், 18 யானைகள் இறந்திருப்பதால் யாரெனும் உணவில் விஷம் கலந்து கொடுத்தார்களா என்ற சந்தேகமும் எழுவதாக விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.