உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் பேச்சுத்திறன் குறைபாடுள்ள 14 வயது சிறுவன், 2 வயது சிறுமியை வீட்டு மொட்டை மாடியில் பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.
சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளான். தற்போது அந்தச் சிறுமி சிகிச்சைக்காக டெல்லியிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டின் அருகிலேயே சிறுவன் வசித்துவந்ததும், விளையாடுவதாகக் கூறி சிறுமியை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று சிறுவன் அத்துமீறியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த சில வாரங்களாக உத்தப் பிரதேச மாநிலத்தில் அதிகளவில் பாலியல் வழக்குகள் பதிவாகிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காங்கிரஸ் எம்எல்ஏ மகன் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு