ETV Bharat / bharat

கர்நாடகாவில் முழு ஊரடங்கு!

author img

By

Published : May 7, 2021, 10:36 PM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 14 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

lockdown imposed in Karnataka
கர்நாடகாவில் முழு ஊரடங்கு

கர்நாடக மாநிலத்தில் கரோனா தொற்று மிகவேகமாக பரவி வருகிறது. பெங்களூருவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

இதனால் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் மே 10 தேதி காலை 6 மணி முதல் மே 24 காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் பி. எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அனைத்து ஹோட்டல்கள், பார்கள் மூடப்பட்டிருக்கும். காலை 6 முதல் 10 மணி வரை உணவகங்கள், இறைச்சி கடைகள், காய்கறி கடைகள் இயங்கலாம்

ஊரடங்கு நேரத்தில் காலை 10 மணிக்கு மேல் வெளியே வர அனுமதி கிடையாது. மாநிலத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்து முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: தடுப்பூசி போட்டுக்கொண்ட விஜயபாஸ்கருக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.