ETV Bharat / bharat

ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 125 பேருக்கு கரோனா? - இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு

இத்தாலியின் ரோம் நகரிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் 125 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதாக விமான நிலைய இயக்குநர் தகவல் தெரிவித்தார். இதை ஏர் இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா
author img

By

Published : Jan 6, 2022, 7:11 PM IST

அமிர்தசரஸ்: ஒமைக்ரான் பரவல் காரணமாகப் பல்வேறு நாடுகள் பன்னாட்டு விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பு, ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க கரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. விமான நிலையங்களிலும் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இத்தாலியின் ரோம் நகரிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வந்த 179 பயணிகளில் 125 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதாக அமிர்தசரஸ் விமான நிலைய இயக்குநர் வி.கே. சேத் தெரிவித்தார்.

இதற்கு மறுப்புத் தெரிவித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் ட்விட்டர் பதிவிட்டுள்ளது. அதில், "ஏர் இந்தியா விமானம் மூலம் ரோமிலிருந்து அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதாக ஊடக நிறுவனங்களில் செய்தி வெளியாகின. இது தவறானது; ஆதாரமற்றது. ஏர் இந்தியா, தற்போது ரோமிலிருந்து விமானம் எதுவும் இயக்கப்படவில்லை" என விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், இத்தாலியின் மிலன் என்ற இடத்திலிருந்து பன்னாட்டு சார்ட்டர்டு விமானத்தில் வந்தவர்களுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: அம்மா உணவகம் மூடல்? - நல்லரசை நிறுவ நினைக்கும் ஸ்டாலினுக்கு இது அழகல்ல... ஏழைகளை நினைங்க!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.