ETV Bharat / bharat

Bihar: பாலத்தின் தூணுக்கு இடையே சிக்கிய 12 வயது சிறுவன் - போராடி மீட்ட பின் நேர்ந்த சோகம்!

author img

By

Published : Jun 8, 2023, 9:10 PM IST

பீகாரில் பாலத்தின் கட்டுமானத்தின்போது தூணுக்கும் சுவருக்கும் இடையில் சிக்கிய 12 வயது சிறுவனை மீட்புக் குழுவினர் சுமார் 20 மணி நேரத்திற்குப் பிறகு மீட்டனர்.

child
பீகார்

பீகார்: ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள அதிமி என்ற கிராமத்தில் சோன் ஆற்றின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. நஸ்ரிகஞ்ச் மற்றும் தாவுத்நகரை இணைக்கும் வகையில் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று (ஜூன் 7) எதிர்பாராத விதமாக 12 வயது சிறுவன் பாலத்தின் கட்டுமானத்தில் சிக்கிக் கொண்டான்.

பாலத்தின் தூணுக்கும் சுவருக்கும் இடையில் இருந்த சிறிய இடைவெளியில் சிறுவன் சிக்கிக் கொண்டான். கட்டுமானப் பணியில் இருந்த ஊழியர்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து உடனடியாக போலீசார், மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பலி.. 21 மணி நேரத்துக்கு பின் சடலமாக மீட்பு!

காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சிறுவனை மீட்கும் பணியைத் தொடங்கினர். பல மணி நேரமாக போராடியும் சிறுவனை மீட்க முடியவில்லை. இதையடுத்து பாலத்தின் தூணை வெட்டி சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்

சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணி நடைபெற்றது. தொடர் போராட்டத்தை அடுத்து ஒரு நாளுக்குப் பிறகு இன்று சிறுவனை மீட்புக்குழுவினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றனர். சிறுவனின் உடல்நிலை மோசமாக இருந்தது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த நிலையில், சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலன் இன்றி சிறுவன் உயிரிழந்துவிட்டான்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ரிகஞ்ச் பிடிஓ ஜாபர் இமாம், “நேற்று சிறுவன் பாலத்தின் தூண் மற்றும் சுவர் இடையே மாட்டிக் கொண்டான். உடனடியாக தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.

அந்தக் குழு சிறுவனுக்கு காயம் ஏற்படாத வண்ணம் மிகுந்த எச்சரிக்கையுடன் மீட்புப் பணியை மேற்கொண்டது. மருத்துவக் குழுவும் வந்தது. சிறுவனை வெளியே கொண்டு வரும் வரையில் குழாய்கள் மூலம் ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டது. சிறுவனை மீட்க பாலத்தின் துணை வெட்ட வேண்டியிருந்தது. ஆனால் அது பலனளிக்கவில்லை. இறுதியாக சிறுவன் மீட்கப்பட்டான்" என்று கூறினார்.

உயிரிழந்த சிறுவன் ரஞ்சன் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சிறுவனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுவன் காணாமல் போனதாகவும், பிறகு ஒரு பெண்ணிடமிருந்து மீட்கப்பட்டதாகவும் சிறுவனின் தந்தை கூறினார்.

இதையும் படிங்க: Odisha Train Accident: பயணிகளின் அலறல் சத்தம்! ஒடிசா ரயில் விபத்தின் பதைபதைக்க வைக்கும் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.