ETV Bharat / bharat

சூடானில் இருந்து வந்த 117 இந்தியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் - கரோனாவுக்கு இல்லை?

author img

By

Published : Apr 30, 2023, 7:42 AM IST

சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களில் மஞ்சள் காய்ச்சலுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 117 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Operation Kaveri
Operation Kaveri

டெல்லி : சூடானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ராணுவத்திற்கு துணை ராணுவத்திற்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. தலைநகர் கார்தோம் தொடங்கி நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் துப்பாக்கிச் சூடு சத்தமும், பீரங்கிகளின் குண்டு மழையும் பொழிந்த வண்ணம் உள்ளன.

உள்நாட்டு போரில் 500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என ஐ.நா தெரிவித்து உள்ளது. அதேநேரம் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த போரில் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக அங்கு நடக்கும் நிகழ்வுகள் குறித்து தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் திட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறை கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஆபரேஷன் காவேரி என திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. சவுதி அரேபியாவின், ஜெட்டா நகரில் மத்திய வெளியுறவு அமைச்சகம் கட்டுப்பாடு மையம் அமைத்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

சூடானில் சிக்கி உள்ள ஏறத்தாழ 3 ஆயிரம் இந்தியர்களை மீட்க மத்திய வெளியுறவு அமைச்சகம் இலக்கு நிர்ணயித்து உள்ள நிலையில் இதுவரை ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன், ஜெட்டா நகரில் முகாமிட்டு மீட்பு பணிகளை கண்காணித்து வருகிறார்.

இந்நிலையில் சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களில் 117 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மஞ்சள் காய்ச்சலுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்திற்காக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மத்திய மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகளில் பரவலாக காணப்படும் ஒரு வைரஸ் பாதிப்பு தான் இந்த மஞ்சள் காய்ச்சல். இந்த நோய் ஏடீஸ் (Aedes) பெண் கொசுக்கள் மட்டும் ஹீமோகோகஸ் (Haemogogas) ஆகிய கொசு வகைகளால் பரவுவதாக கூறப்படுகின்றன. காய்ச்சல், தலைவலி, மூட்டுகளிலும், தசைகளிலும் வலி, கல்லீரல் பாதிப்படைந்து மஞ்சள் காமாலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உடலிலும் குடலிலும் ரத்தக் கசிவு, இரைப்பை, குடல், ரத்தக் கசிவுகளால் ரத்த வாந்தி, மலம் கறுத்துப்போதல் போன்ற தொந்தரவுகளும் இந்த நோய்க்கு அறிகுறிகள் எனக் கூறப்படுகின்றன. இந்த நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பெரும்பாலும் இந்தியாவில் இந்த நீய் காணப்படாத நிலையில் மத்திய மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகளுக்கு சென்று வருபவர்களால் பரவக் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் காரணமாக சூடானில் இருந்து இந்தியா திரும்பிய, மஞ்சள் காய்ச்சலுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 117 பேரை தனிமைப்படுத்தியதாக மத்திய சுகாதாரத் துறை மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 7 நாட்கள் தனிமைபடுத்துதலுக்கு பின் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க : தேர்வு தோல்வியால் விரக்தி - ஆந்திராவில் 9 மாணவர்கள் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.