புதுடெல்லி: மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதால் திமுக மாநிலங்களவை உறுப்பினர்களான கனிமொழி என்.வி.என்.சோமு, சண்முகம், அப்துல்லா, என்.ஆர்.இளங்கோ, கல்யாணசுந்தரம் மற்றும் கிரிராஜன் ஆகியோர் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களான சுஷ்மிதா சென், மவுஷம் நூர், ஷாந்தா சேத்ரி, அபி ரஞ்சன் பிஷ்வர், நாதிமுல் ஹகியூ, டாக்டர் சாந்தனு சென் மற்றும் டோலா சென் ஆகியோரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி.க்களான லிங்கையா யாதவ், ரவிஹந்திரா வாதிராஜூ மற்றும் தாமோதர் ராவ் திவாகொண்டா ஆகியோர் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.க்களான ஏ.ஏ.ரஹீம், சிவதாசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யான சந்தோஷ் குமார் ஆகியோர் உட்பட 19 பேர் மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், அவை 20 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
-
19 opposition Rajya Sabha MPs suspended for the remaining part of the week for storming well of the House and raising slogans https://t.co/cyLSmWIvd3 pic.twitter.com/wGvlQQLNF5
— ANI (@ANI) July 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">19 opposition Rajya Sabha MPs suspended for the remaining part of the week for storming well of the House and raising slogans https://t.co/cyLSmWIvd3 pic.twitter.com/wGvlQQLNF5
— ANI (@ANI) July 26, 202219 opposition Rajya Sabha MPs suspended for the remaining part of the week for storming well of the House and raising slogans https://t.co/cyLSmWIvd3 pic.twitter.com/wGvlQQLNF5
— ANI (@ANI) July 26, 2022
முன்னதாக நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வைக் கண்டிக்கும் வகையிலான பதாகைகளை வைத்து எதிர்ப்பை தெரிவித்ததால், காங்கிரஸ் எம்.பி.க்களான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் ஆகிய நான்கு பேரையும் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதிலும் இருந்து இடைநீக்கம் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உட்பட 4 பேர் சஸ்பெண்ட்