ETV Bharat / bharat

ரேவந்த் ரெட்டி தலைமையில் 11 அமைச்சர்கள்.. யார் யாருக்கு என்ன துறை ஒதுக்கீடு?

Telangana Cabinet: தெலங்கானா மாநில முதலமைச்சராக இன்று ரேவந்த் ரெட்டி பதவி ஏற்ற நிலையில், அவருடன் 11 அமைச்சரவை உறுப்பினர்களும் பதவி ஏற்று உள்ளனர்.

11 Ministers took charge today in the Cabinet led by Revanth Reddy in Telangana state
ரேவந்த் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2023, 8:47 PM IST

ஹைதராபாத்: ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனியாக தெலங்கானா மாநிலம் உருவான பின்னர் முதன்முறையாக காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் இன்று ஹைதராபாத்தில் உள்ள எல்.பி.ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்.

மேலும் அவருடன் 11 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். தெலங்கானா மாநில அளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றி இருக்கும் நிலையில் காங்கிரசின் முக்கிய தலைவர்கள் பலரும் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மேலும், தெலங்கானா முதலமைச்சராக பொறுப்பேற்ற ரேவந்த் ரெட்டிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

தெலங்கானா முதலமைச்சர் ரேசில் நான்கு பேர் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அதில் பெரிதும் எதிர்பார்க்க பட்ட பாட்டி விக்ரமார்காவை துணை முதலமைச்சராக மாற்றி விவாதங்களுக்கு காங்கிரஸ் தலைமை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இன்று அமைச்சரவை பொறுப்பேற்றுக் கொண்டவர்கள் விவரம் பின்வருமாறு,

உத்தம் குமார் ரெட்டி - உள்துறை அமைச்சர்

கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி - நகராட்சி அமைச்சர்

ஸ்ரீதர் பாபு - நிதி அமைச்சர்

பொங்குலேட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி - நீர் மற்றும் வடிகால் துறை அமைச்சர்

கொண்டா சுரேகா - மகளிர் நலத்துறை அமைச்சர்

பாட்டி விக்ரமார்கா - துணை முதலமைச்சர், வருவாய்த்துறை அமைச்சர்

தாமோதர நரசிம்மா - சுகாதாரத் துறை அமைச்சர்

ஜூபலி கிருஷ்ண ராவ் - கூட்டுறவுத்துறை அமைச்சர்

பொன்னம் பிரபாகர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

சீதக்கா - பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்

தும்மல நாகேஸ்வர ராவ் - சாலை மற்றும் கட்டடங்கள் துறை அமைச்சர்

என இன்று பதவி ஏற்றவர்களுக்கு மேற்கண்ட இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று பதவி ஏற்றவர்களில் நக்சல் ஆக இருந்து பின்னர் அரசியலில் ஈடுபட்டவர் போன்ற சுவாரஸ்யமான பின்னணி கொண்ட அனுசுயா சீத்தாக்காவும் அமைச்சாராக பதவி ஏற்றுள்ளனர். இந்த அமைச்சரவை தற்போது அம்மாநில அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: புயல் கடந்தும் வெள்ளம் வடியவில்லை..! வதைப்படும் வடசென்னை மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.