ETV Bharat / snippets

லாரிகளை மடக்கி பணம் வசூல்.. இரு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 9:24 PM IST

பணம் வாங்கும் காட்சி
பணம் வாங்கும் காட்சி (Credits - ETV Bharat Tamil Nadu)

விழுப்புரம்: வானூரை அடுத்த மொரட்டாண்டி சுங்கச்சாவடி அருகில் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு எண் 4-ல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் பூமிநாதன், காவலர் அப்துல் ரஷீத் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக திண்டிவனம் - புதுச் சேரி சாலையில் வந்து கொண்டிருந்த கனரக வாகனங்களை நிறுத்தி, அதன் ஓட்டுநர்களிடம் இருந்து பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. இதனையடுத்து, காவலர்கள் இருவரையும் அங்கிருந்து விழுப்புரம் ஆயுதப்படை பிரிவுக்கு இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் உத்தரவிட்டார். மேலும், லஞ்சப்பணம் வாங்கியது தொடர்பாக போலிஸ் சூப்பிரண்டு சுனில் துறை ரீதியான விசாரணை நடத்தி வருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.