ETV Bharat / snippets

தமிழகத்தில் தொடரும் ரேஷன் அரிசி கடத்தல்.. தூத்துக்குடியில் ரேஷன் அரிசி கடத்திய மூவர் கைது!

Arrested persons
கைதானவர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 8:08 AM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட கொல்லம்பரும்பு கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மூன்று இருசக்கர வாகனத்தில் மூட்டைகளுடன் வந்தவர்கள் போலீசாரை கண்டதும், மூட்டைகளை கீழே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

போலீசார் அந்த மூட்டைகளை சோதனையிட்ட போது, ரேஷன் அரிசி என்பது தெரியவந்தது. மேலும் தப்பியவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர்கள் தூத்துக்குடி குளத்தூரைச் சேர்ந்த மதன் (வயது 20), கலை முனியசாமி (19), கே.வி.கே நகரைச் சேர்ந்த சிவா(21) என்பதும் தெரிய வந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்த போலீசார், கைப்பற்றப்பட்ட 14 மூட்டை ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.