ETV Bharat / snippets

கோவில்பட்டி அருகே ஏடிஎம் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததால் மர்ம நபர் தப்பி ஓட்டம்!

திருட முயற்சி செய்யப்பட்ட ஏடிஎம்
திருட முயற்சி செய்யப்பட்ட ஏடிஎம் (credits-ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 9, 2024, 12:33 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அமைந்துள்ள முத்தானந்தபுரம் தெருவில் தனியார் மருத்துவமனை முன்பு டிபிஎஸ் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் இன்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி செய்துள்ளார். அப்போது திடீரென அலாரம் ஒலித்ததால், அதிர்ச்சி அடைந்த அவர், தனது முயற்சியை கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.