தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி மார்க்கெட் அருகில் உள்ள முத்து கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த டட்லி. இவர் சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் மற்றும் டெக்கரேஷன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்றிரவு மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு அருகில் உள்ள மாவு மில் மற்றும் கடைகளுக்கு பரவத்தொடங்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வந்த தீயணைப்பு துறையினர் மின்வாரிய ஊழியர்கள் மூலமாக மின்சாரத்தை துண்டித்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் டட்லிக்கு சொந்தமான கடையில் இருந்த சவுண்ட் சர்வீஸ் மற்றும் டெக்கரேஷன் பொருட்கள் என ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகின.
இதேபோல் மாவு மில்லில் இருந்த இயந்திரங்களும் தீயில் சேதமாகின. இந்த தீ விபத்து குறித்து தென்பாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.