சென்னை: விருகம்பாக்கம் பகுதியில் இன்று காலை தூய்மைப் பணியாளர்கள் வழக்கம் போல் தங்கள் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது வீட்டில் உள்ள வைர நெக்லஸை தவற விட்டுவிட்டதாகவும், குப்பைத் தொட்டியில் தேடி பார்க்கும் படியும் கேட்டுள்ளார்.
வைர நெக்லஸ் காணாமல் போனது குறித்து தகவல் அறிந்து சென்ற மேற்பார்வையாளர் முன்னிலையில், தூய்மைப் பணியாளர் அந்தோணி சாமி தேடிய போது குப்பைகளுக்கு இடையே வைர நெக்லஸ் இருந்ததை கண்டுபிடித்துள்ளார்.
பின்னர், அந்த நெக்லஸை தூய்மைப் பணியாளர் உரியவரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், அந்தோணி இதுபோன்று செல்போன் உள்ளிட்ட பொருட்களை கண்டெடுத்து உரியவர்களிடம் ஒப்படைத்திருப்பதாக தெரிவித்தார். இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை சுட்டிக்காட்டி அப்பகுதியில் பணிபுரியும் தூய்மைப் பணிக் குழுவினருக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.