ETV Bharat / snippets

திருவள்ளூரில் காணாமல் போன ஆடுகளைக் கண்டுபிடித்தால் ரூ.5000 சன்மானம்! - வைரலாகும் போஸ்டர்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 11:12 AM IST

காணமல் போன ஆடுகளைக் கண்டுபிடித்துத் தரக் கோரி ஒட்டிய போஸ்டர்
காணமல் போன ஆடுகளைக் கண்டுபிடித்துத் தரக் கோரி ஒட்டிய போஸ்டர் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் சர்ச் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் என்கிற கார்த்திகேயன்(38). இவர் கடம்பத்தூரில் சிக்கன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கார்த்திகேயன் தனது வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 26ஆம் தேதியன்று இவரது வீட்டிலிருந்து இரண்டு ஆடுகள் காணாமல் போனது. பல இடங்களில் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து கடம்பத்தூர் போலீசிலும் புகார் கொடுத்தார்.

ஆனால், இதுநாள் வரையிலும் அந்த ஆடுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், கார்த்திகேயன் இன்று காலை 9 மணியளவில் ஆடுகளைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ரூ.5000 சன்மானம் வழங்கப்படும் என கடம்பத்தூர், பேரம்பாக்கம், தண்டலம், பிஞ்சிவாக்கம், சத்தரை, மப்பேடு, கீழச்சேரி போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே சுவர்களில் ஆடுகளின் புகைப்படங்களுடன் கூடிய போஸ்டர்களை ஒட்டி வைத்து தேடிவருகிறார். இது தொடர்பான போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.