கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் வசித்து வந்தவர் 108 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள். இவர் உடல்நலக் குறைவால் நேற்றிரவு (செப். 27) காலமானார். இவரது உடல் தேக்கம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் அஞ்சலி செலுத்தியதும், பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இணைய வழியில் இரங்கல் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் தமிழக அமைச்சர் முத்துசாமி தற்போது நேரில் வருகை புரிந்து மறைந்த பாப்பம்மாள் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “பாப்பம்மாள் 1951ஆம் ஆண்டு முதல் திமுகவில் இருந்து வருகிரார். இவர் பல போராட்டங்களில் பங்கேற்றவர். குறிப்பாக இந்தி திணிப்பு போராட்டத்தில் பெரும்பங்காற்றியவர்” என்றார்.