ETV Bharat / snippets

நீலகிரி: குப்பை லாரியில் முதியோர்களை ஏற்றிச் சென்றதால் சர்ச்சை

குப்பை ஏற்றி செல்லும் வாகனத்தில் 100 நாள் வேலை செய்யும் முதியவர்கள்
குப்பை ஏற்றி செல்லும் வாகனத்தில் 100 நாள் வேலை செய்யும் முதியவர்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2024, 8:00 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மேலூர் ஊராட்சியில் 50க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அவர்கள் வேலை முடித்துவிட்டு, தூதூர்மட்டம் பேருந்து நிலையத்தில் இருந்து சம்பளம் பெறுவதற்காக மேலூர் ஊராட்சி அலுவலகத்திற்கு செல்ல அவர்களை குப்பை வண்டியில் ஏற்றி சென்றுள்ளனர்.

இதைப்பார்த்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து வண்டியை சிறைப்பிடித்தனர். மேலும் அங்கு கூடிய மக்கள் வாகன ஓட்டுநரிடம் குப்பைகளைக் கொண்டு செல்லும் லாரிகளில் மனிதர்களை ஏற்றி செல்லாமா? அதுவும் வயதான முதியோர்களையும், பெண்களையும் இது போன்ற சுத்தமில்லாத நோய் தொற்று ஏற்படுத்தும் வாகனத்தில் ஏற்றி செல்லாமா? என கேள்வி எழுப்பினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.