திண்டுக்கல்: திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆசிக்முகமது என்ற அல்லா ஆஷிக் (30). இவர் 17 வயது சிறுவனுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது தொடர்பாக, கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி அன்று திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சரண், அல்லா ஆஷிக்கு 8 அண்டுகள் சிறைத் தண்டனையும், 25,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும், இவர் மீது திமுக பிரமுகர் பட்டறை சரவணன் கொலை தொடர்பான வழக்கு மற்றும் கொலை முயற்சி உட்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.