ETV Bharat / snippets

நவமலை சாலையில் யானைக்கூட்டம்.. வனத்துறை முக்கிய எச்சரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 3:03 PM IST

சாலையில் உலவும் யானை புகைப்படம்
சாலையில் உலவும் யானை புகைப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: கோடை காலத்தின் போது உணவு மற்றும் தண்ணீருக்காக காடுகளிலிருந்து வெளியேறிய யானைகள் சாலைகள், குடியிருப்புப் பகுதிகளுக்குள் வந்தது. தற்போது, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், பொள்ளாச்சி ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

அதனால் வன விலங்குகள் அடர் காட்டுப் பகுதியில் உள்ள கொசுக்களின் தொல்லையிலிருந்து தப்பிக்க காட்டை விட்டு வெளியேறி சாலைகளில் உலா வருகிறது. அந்த வகையில், நவமலை செல்லும் வனப்பாதையில் காட்டு யானை ஒன்று குட்டிகளுடன் உலா வருகிறது. இதைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது யானைக் கூட்டம் சாலைகளில் உலா வருவதால், பாதுகாப்பு கருதி இருசக்கர வாகனங்களில் சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறை தடை வித்துள்ளது. மேலும், யானைக் கூட்டம் இடம்பெயரும் வரை பொது போக்குவரத்தை மட்டுமே பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்த வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.