ETV Bharat / snippets

புரட்டாசி ஓவர் ஓவர்.. காசிமேட்டில் குவிந்த மக்கள்! -வஞ்சிரம், வவ்வால் மீன்கள் விலை எவ்வளவு?

மீன்கள், காசிமேட்டில் மீன் விற்பனை
மீன்கள், காசிமேட்டில் மீன் விற்பனை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2024, 3:17 PM IST

சென்னை : புரட்டாசி மாதம் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது அசைவம் சாப்பிடக்கூடாது என்பது தான். பெரும்பாலும் இந்துக்கள் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். ஏனென்றால் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் புரட்டாசியில் அசைவம் சாப்பிடமாட்டார்கள்.

அந்த வகையில், புரட்டாசி மாதம் கடந்த அக் 17ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், விடுமுறை நாளான இன்று அதிகாலையிலேயே சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க மக்கள் குவிந்தனர். மீன்கள் வரத்து குறைவாக இருப்பதால், மீன்களின் விலைகள் சற்று அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, வவ்வால் - ரூ.300, பாறை - ரூ.300, வஞ்ரம் - ரூ.600, சங்கரா - ரூ.300, காலா - ரூ.400, வெள்ளை- ரூ.600 நாக்கு - ரூ.400, கடம்பா - ரூ.200, எரா - ரூ.400, நண்டு - ரூ.200, ஜிலேபி - ரூ.250 என விற்கப்படுகின்றது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.