சென்னை: சென்னை கடற்கரை-தாம்பரம் வரையிலான புறநகர் ரயில் சேவை நாளை (செப்., 22) காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் ரயில் வழித்தடத்தில் உள்ள, தாம்பரம் யார்டில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் இயங்ககூடிய ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை 13 மணி நேரத்திற்கு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் மற்றும் திரும்பிச் செல்லும் அனைத்து புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் நாளைய அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், ரத்து செய்யப்பட்ட புறநகர் ரயில்களுக்கு பதிலாக சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரத்திற்கு சிறப்பு புறநகர் ரயில்களானது இயக்கப்படும் எனவும் அதற்கான அட்டவணையை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.