கோயம்புத்தூர்: கோயம்புத்தூர், நவக்கரை நந்தி கோயில் அருகே கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் லாரிகளை பெண் வேடமணிந்த நபர்கள் உதவி கேட்பது போல் லாரியை நிறுத்தி வழிப்பறியில் ஈடுபவதாக தொடர் புகார்கள் வந்துள்ளது.
இதனையடுத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தேடுதல் பணி துவங்கியது. மதுக்கரை காவல் ஆய்வாளர் தலைமையில் தேடுதல் பணி தொடர்ந்த நிலையில் கந்தேகவுண்டன் சாவடி பகுதியைச் சேர்ந்த சபரீஷ், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கருவாச்சி (எ) குரு பிரகாஷ், உடுமலைப் பகுதியைச் சேர்ந்த சூர்யா, நாகராஜ் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தடியன் (எ) சிவா ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை 5 பேரையும் கைது செய்த தனிப்படை போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.