ETV Bharat / snippets

காய்ச்சலால் 13 வயது சிறுமி உயிரிழப்பு.. தேனியில் அடுத்தடுத்து இருவர் பலி!

தேனி மருத்துவமனை, இறப்பு குறித்த கோப்பு படம்
தேனி மருத்துவமனை, இறப்பு குறித்த கோப்பு படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2024, 11:05 AM IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது 13 வயது மகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, நேற்று தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டியை சேர்ந்த 10 வயதான மோகித் என்ற சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்த நிலையில், இன்று 13 வயது சிறுமி காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, சிறுமிக்கு ஆறு நாட்களாக காய்ச்சல் இருந்ததோடு, மஞ்சள் காமாலையும் இருந்ததால் சிகிச்சை பலனளிக்காமல் உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.