வளர்ப்பு நாயால் நடந்த தகராறு.. நாயின் உரிமையாளரின் குடும்பத்தினரைத் தாக்கிய இளைஞர்கள்! - Pet dog and owner brutally beaten - PET DOG AND OWNER BRUTALLY BEATEN

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 9:12 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநில தலைநகரம் ஹைதராபாத்தில் உள்ள ரஹ்மத் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீநாத். இவரது வளர்ப்பு நாய், அப்பகுதி மக்களை கடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதி இளைஞர்கள் தனது செல்லப்பிராணியுடன் வீதியில் நின்று கொண்டிருந்தபோது அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து, சத்தம் கேட்டு ஓடி வந்த ஸ்ரீநாத்தின் உறவினர்கள், இளைஞர்கள் ஸ்ரீநாத்தை அடிப்பதை தடுக்க முயன்றுள்ளனர். இருப்பினும், அந்த இளைஞர்கள் அவரது உறவினர்களையும் கம்பு மற்றும் இரும்பு ராடால் கொடூரமாக தாக்கி உள்ளனர். இதில் ஸ்ரீநாத் மற்றும் அவரது குடும்பத்தினர் படுகாயம் அடைந்தனர்.

பின்னர், இது குறித்து தகவலறிந்த மதுராநகர் போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தனுஞ்சய் உள்ளிட்ட 4 இளைஞர்களை கைது செய்துள்ளனர். இந்நிலையில் இளைஞர், நாய் வளர்த்தவரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அண்மைக்காலமாக வீட்டில வளர்க்கப்படும் நாய்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலரை கடிக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொதுமக்களை கடிக்க முயன்ற வளர்ப்பு நாயின் உரிமையாளர் தாக்கப்படும் காட்சி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.