LIVE: மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின்! - Udhayanidhi Election campaign - UDHAYANIDHI ELECTION CAMPAIGN
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/24-03-2024/640-480-21056676-thumbnail-16x9-udhay.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Mar 24, 2024, 7:02 PM IST
|Updated : Mar 24, 2024, 7:33 PM IST
மதுரை: திமுக இளைஞரணி செயலாளரும், சென்னை திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் பகுதி அருகே தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். அதன் நேரலைக் காட்சிகள்.. இந்த பிரச்சாரத்தின்போது, மதுரை திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். முன்னதாக, இன்று தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிப்பில் உதயநிதி ஈடுபட்டார். மேலும், நேற்றைய தினம் ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தேனி ஆகிய மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார். இவற்றில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி சார்பில் நவாஸ் கனி போட்டியிடுகிறார். அதேபோல், தேனியில் திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் களம் காண்கிறார். மேலும், விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அதன் வேட்பாளராக மாணிக்கம் தாகூர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Last Updated : Mar 24, 2024, 7:33 PM IST