திருச்சியில் ரயில் தடம் புரண்டு விபத்து சிறப்பு ஒத்திகை பயிற்சி! - Train Accident Rescue Practice - TRAIN ACCIDENT RESCUE PRACTICE
🎬 Watch Now: Feature Video
Published : Aug 23, 2024, 4:29 PM IST
திருச்சி: திருச்சி ஜங்ஷன் அருகே குட்செட் ரயில்வே பணிமனையில் தெற்கு ரயில்வே சாா்பில் பேரிடர் கால மீட்பு நடவடிக்கை பயிற்சி இன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் இயற்கை பேரிடர் மற்றும் ரயில் விபத்துகளின் போது பயணிகளை மீட்பது, பாதுகாப்பாக கொண்டு செல்வது, விரைந்து நடவடிக்கை எடுப்பதில் பல்வேறு துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாத நிலையை தவிர்க்கும் வகையில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் ரயில்வே பாதுகாப்பு பிரிவு, ரயில்வே பாதுகாப்பு படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படை மற்றும் பெருநகர பேரிடர் மீட்புப் படையைச் சோ்ந்த 400 பேர் கலந்து கொண்டனர். இதற்காக சுமார் 3 மணி நேரம் ரயில் விபத்து நடைபெற்றது போன்று பெட்டிகள் அமைக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டது.
மேலும், இதில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் எம்.எஸ்.அன்பழகன், முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி, தேசிய பேரிடர் மேலாண்மை மூத்த அதிகாரிகள், மருத்துவர்கள், தீயணைப்பு அலுவலர்கள், ஆம்புலன்ஸ் ஊர்தி ஓட்டுநர்கள், ரயில்வே பணியாளர்கள் கலந்து கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டு பயிற்சி பெற்றனர்.