“இந்த ரோட்டோட குவாலிட்டிய இப்பவே பாக்கனும்”.. களத்தில் இறங்கிய தூத்துக்குடி ஆட்சியர்! - Thoothukudi collector Elambahavath - THOOTHUKUDI COLLECTOR ELAMBAHAVATH
🎬 Watch Now: Feature Video
Published : Aug 29, 2024, 5:23 PM IST
தூத்துக்குடி: "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தில், தூத்துக்குடி அருகே உள்ள ஏரல் வட்டம், நட்டாத்தி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நியாய விலைக் கடை கட்டுமானப் பணிகள், கொம்புக்காரன் பொட்டல் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகள், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று பார்வையிட்டார்.
தொடர்ந்து, பெருங்குளம் இரண்டாம் நிலை பேரூராட்சி உண்டியலூர் வடக்கு தெருவில், வெள்ளத்தால் சேதமடைந்த வீடு தற்பொழுது புதிதாக கட்டப்பட்டு வருவதையும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலையையும் ஆய்வு செய்தார்.
பின்னர், ஏரல் ஆற்றுப்பாலம் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் சேதமடைந்து, தற்பொழுது நெடுஞ்சாலைத்துறை மூலம் கட்டப்பட்டு வருவதையும், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் குரங்கணி ஊராட்சியில், ஊரக வளர்ச்சித்துறை மூலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குரங்கணி புறவழிச்சாலையின் தரம் குறித்து ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மாவடிப்பண்னை அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ - மாணவியர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் மற்றும் சுவை குறித்து ஆய்வு செய்தார்.