பென்சில் நுனியில் பெண் சிற்பம்.. அசத்திய தேனி இளைஞர்! - Womens day pencil art
🎬 Watch Now: Feature Video


Published : Mar 8, 2024, 3:52 PM IST
தேனி: உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதியான இன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's Day) கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெண்களைப் பெருமைப்படுத்தும் வகையில், பென்சில் நுனியில் பெண்ணின் உருவத்தை செதுக்கியுள்ளார், தேனி இளைஞர் பிரேம்குமார்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார். சாக்பீஸ் மற்றும் பென்சில்களில் உருவங்களைச் செதுக்கும் திறமை கொண்ட இவர், சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில், பென்சிலின் நுனியில் பெண் உருவத்தை செதுக்கி உள்ளார்.
ஒரு சென்டிமீட்டர் உயர பென்சில் நுனியில் பெண் உருவத்தை செதுக்கி, மற்றொருபுறம் ஆண் ஒருவர் பெண்ணுக்கு மரியாதை செலுத்துவது போல் செதுக்கி, தனது திறனை வெளிப்படுத்தியுள்ளார். உலகின் அசைக்க முடியாத ஆற்றல் பெண்கள் என்றும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவும், பெண்கள் போற்றப்பட வேண்டும் என்ற கருத்துடன் இந்த பென்சில் உருவத்தை செதுக்கியதாகவும் பிரேம்குமார் தெரிவித்தார். இவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.