அனுமதிக்கப்பட்ட மரங்களை தாண்டி 6 மரங்களை வெட்டிய தனியார் ஹோட்டல் - சமூக ஆர்வலர்கள் புகார்!
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் புதிதாக அமைந்துள்ளது ஹோட்டல் கிராண்ட் மெரிடியன். இந்த ஹோட்டலின் முன்புறம் நெடுஞ்சாலை துறை சார்பில் பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தனியார் உணவகத்திற்கு, வாடிக்கையாளர்கள் செல்ல போதிய இட வசதி இல்லை எனக் கூறி உணவகத்திற்கு முன் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான 2 மரங்கள் மட்டுமே அகற்றி கொள்வதாக தனியார் உணவக நிர்வாகத்தினர் வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியரிடம் மனு அளித்து 2 மரங்களை அகற்றிக்கொள்ள அனுமதி பெற்றுள்ளனர்.
ஆனால் அனுமதி பெற்றத்தை விட கூடுதலாக 6 மரங்களை தனியார் உணவக நிர்வாகத்தினர் வெட்டியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் அனுமதி பெற்றதை விட அதிக எண்ணிக்கையில் சட்ட விரோதமாக மரங்களை வெட்டிய தனியார் உணவக நிர்வாகத்தினர் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.