LIVE: கள்ளக்குறிச்சி விவகாரம்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பு - KALLAKURICHI ILLICIT LIQUOR Death - KALLAKURICHI ILLICIT LIQUOR DEATH

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 1:06 PM IST

Updated : Jun 24, 2024, 1:33 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதில் இதுவரை 57 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அதனை நேரலையில் காணலாம்.இது குறித்து எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக, உடனடியாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலிறுத்தியுள்ளார். இந்நிலையில், இவ்விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதேஷ் மற்றும் சிவக்குமார் உள்ளிட்ட எட்டு பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அவதூறான கருத்துக்களை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வெளியிட்டதாகவும், இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், தவறினால் ரூ.1 கோடி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் எனவும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் சார்பில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோருக்கு அவரது வழக்கறிஞர் வில்சன் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதேபோல, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக அரசு எதையும் மறைக்கவில்லை எனவும்; அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Jun 24, 2024, 1:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.