"BUN ன்னா கிரீம் இருக்கணூம்..Bike ன்னா ஹெல்மெட் இருக்கணும்" - நூதன சாலை விழிப்புணர்வு! - free bun free petrol

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2024, 6:10 PM IST

thumbnail
வாகன ஓட்டிகளுக்கு க்ரீம் பன்னுடன் ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்ட காட்சி (credits - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: சாலை விபத்துகளை குறைக்கவும், தலைக்கவசம் அணிவதை ஊக்குவிக்கும் வகையில் ஜோதி தனியார் அறக்கட்டளை சார்பில், பெட்ரோல் பங்கிற்கு ஹெல்மெட் அணிந்து பெட்ரோல் போட வந்த 50 வாகன ஓட்டிகளுக்கு க்ரீம் பன்னுடன் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என ஜோதி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று "BUN ன்னா கிரீம் இருக்கனும்..Bike ன்னா ஹெல்மெட் இருக்கனும்" என்பதை மையக் கருத்தாக கொண்டு பெட்ரோல் பங்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 50 வாகன ஓட்டிகளுக்கு க்ரீம் பன்னுடன் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.

இது குறித்து ஜோதி தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரபுராஜ்குமார் கூறுகையில், “சாலை விபத்துகளை குறைக்கவும், தலைக்கவசம் அணிவதை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 83 நாட்களில்  ஹெல்மெட் அணிபவர்களை கண்டறிந்து இலவசமாக ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கி வருகிறோம். இது வரையில் 500 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கியுள்ளோம்.

அதன் தொடர்ச்சியாக இன்று 50 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு க்ரீம் பன்னுடன் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது” என்றார். கோவையில் கிரீம் பன் விவகாரம் வைரலான நிலையில், தஞ்சையில் கிரீம் பன்னுடன் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.