நான் வந்துட்டேன்.. வால்பாறை சாலையில் ஒய்யார நடைபோடும் சுள்ளி கொம்பன் யானை! - SULLI KOMBAN ELEPHANT - SULLI KOMBAN ELEPHANT
🎬 Watch Now: Feature Video
Published : Jul 2, 2024, 10:56 PM IST
கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் இருக்கும் இடங்கள் நவமலை, ஜீரோ பாயிண்ட். இவற்றை கடந்து செல்லும் வழியில் பொள்ளாச்சி வால்பாறை சாலை உள்ளது. சமீப காலமாக இங்கு காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் சூழலில், வனப்பகுதிகுள் கொசுக்கடி அதிகமாக இருப்பதால் வனத்தை விட்டு யானைகள் வெளியே வருகின்றன. இதனை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆறு மாதத்திற்கு முன் மனிதர்களை காயப்படுத்தியதாக 4 வழக்குகள் பதியப்பட்ட சுள்ளி கொம்பன் என்ற ஒற்றைக் காட்டு யானை இன்று திடீரென பட்டர்பிளை பார்க் அருகே வந்து, சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்றது. இதனால் நாளை முதல் அங்கிருக்கும் கவியருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சுள்ளி கொம்பன் அங்கு வலம் வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் வால்பாறை சாலை வழி செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.