LIVE: திருவாரூர் திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்! - MK Stalin in Tiruvarur

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 6:47 PM IST

Updated : Mar 23, 2024, 7:32 PM IST

thumbnail

திருவாரூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இன்று திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி மற்றும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் ஆகியோரை ஆதரித்து, பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் நேரடி காட்சிகள்.. முன்னதாக, இன்று காலை முதலே வாக்கு சேகரிப்பில் ஈடுபடத் தொடங்கினார் ஸ்டாலின். அந்த வகையில், தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவாக, தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட ஸ்டாலின், அங்கிருந்த இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரிடமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அதனைத் தொடர்ந்து, தஞ்சை காமராஜ் காய்கறி மார்க்கெட் பகுதியில் வணிகர்கள், பொதுமக்களிடம் வாக்குகளை ஸ்டாலின் சேகரித்தார். அப்போது குழந்தைகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் முதலமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இந்த வாக்கு சேகரிப்பில், தஞ்சை திமுக எம்.பி வேட்பாளர் முரசொலி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்பி பழநிமாணிக்கம், எம்.எல்.ஏ-க்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated : Mar 23, 2024, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.