LIVE: ராமோஜி ராவ் உடலுக்கு பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி நேரலை - RAMOJI RAO TRIBUTE - RAMOJI RAO TRIBUTE

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 9:39 AM IST

Updated : Jun 8, 2024, 11:00 PM IST

ஹைதராபாத்: மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழும நிறுவனர் ராமோஜி ராவ்(87) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவரது உடல், ராமோஜி ஃபிலிம் சிட்டியில் உள்ள அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் நேரலை காட்சிகள்1936-ஆம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள புடபருபுடி கிராமத்தில் பிறந்தவர் ராமோஜி ராவ், ராமோஜி குழும நிறுவனரான இவர் ஈ நாடு, ஈ டிவி பாரத் ஆகிய ஊடகங்களில் நிறுவனராகவும் இருந்து வந்தார். ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய ராமோஜி ஃபிலிம் சிட்டி(Ramoji Film City) ஸ்டூடியோவில் பாகுபலி உள்ளிட்ட பல பிரமாண்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.கடந்த 5-ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்த அவர் இன்று அதிகாலை 4.50 மணிக்கு காலமானார். ராமோஜி ராவ் மறைவு திரையுலகினர் மற்றும் ஊடகத்தினர் மத்தியில் பெரும் சோகத்த ஏற்படுத்தியுள்ளது.ராமோஜி ராவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Last Updated : Jun 8, 2024, 11:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.