கருணாநிதி பிறந்த திருக்குவளையில் கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம்! - Thirukkuvalai Karunanidhi
🎬 Watch Now: Feature Video
Published : Jun 3, 2024, 3:08 PM IST
நாகப்பட்டினம்: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில், இன்று அவரது பிறந்த நாளை ஒட்டி, அவரது இல்லத்தில் குடும்பத்தினரும் அரசியல் பிரமுகர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும், நாகையில் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது.
அதில் இன்று நாகை மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், நாகையில் உள்ள மு.கருணாநிதியின் தந்தை முத்துவேலர், தாயார் அஞ்சுகம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, திருக்குவளை கடைவீதிகளில் நீர் மோர் பந்தல் வைத்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், இளநீர், தர்பூசணி போன்ற வெயிலுக்கு குளிர்ச்சியான பழங்களும் வழங்கப்பட்டது. மேலும், திருக்குவளை கருணாலயா முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு திமுக இளைஞரணி சார்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.