குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு; இரண்டாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை! - coutrallam main falls flood - COUTRALLAM MAIN FALLS FLOOD
🎬 Watch Now: Feature Video
Published : Jun 9, 2024, 12:09 PM IST
தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டுவிட்டு சாரல் மழை பெய்ததன் காரணமாக, குற்றாலம் மெயின் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் இரண்டாவது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு நேற்று முதல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றும் வெள்ளம் குறையாத நிலையில், மெயின் அருவியில் மட்டும் இரண்டாம் நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி மற்றும் சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர். வார விடுமுறை தினம் என்பதால், காலை முதலே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. மேலும், கூட்டம் அதிகரிப்பு காரணமாக காவல்துறையினரும் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.