ஹைதராபாத்: பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக பெண்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். இருப்பினும், இதுபோன்ற சூழ்நிலைகளில் பெண்களைப் பாதுகாக்க தற்போது பல பாதுகாப்பு சாதனங்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சந்தைகளில் கிடைக்கின்றன. அந்த பாதுகாப்பு சாதனங்கள் மூலமாக பெண்கள் எந்த ஆபத்திலிருந்தும் விடுபடலாம். அத்தகைய பெண்களுக்கான பாதுகாப்பு சாதனங்கள் என்ன? அவை பெண்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்ற விவரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
அலாரம் கீசெயின் (Alarm Keychain):
- தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மர்ம நபர்களால் தாக்கப்படும்போது இந்த அலாரம் கீசெயி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- பெண்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகும்போது சத்தமாக கத்தினால் தாக்குதல் நடத்தும் நபர் வாயை மூடிக்கொள்வார்கள். அப்போது இந்த கீசெயினின் முன்பக்கத்தில் உள்ள பட்டனை இரண்டு முறை அழுத்தினால் அலாரம் சத்தமாக ஒலிக்கும். அப்போது நம்மைச் சுற்றியுள்ளவர்களை உதவிக்காக எச்சரிக்கலாம்.
- ஆப்பத்து சூழ்ந்த நேரத்தில் யாரும் இல்லை என்றால், இந்த கீசெயினின் பக்கவாட்டில் உள்ள பட்டனை அழுத்தினால் முன்பக்கத்தில் உள்ள எல்இடி லைட் ஆன் ஆகும். அதை மற்றவரின் பார்வையில் படும்படியாக அடிக்கலாம்.
- இந்த அலாரத்தை நிறுத்த கீசெயினின் முன்பக்கத்தில் உள்ள அதே பட்டனை அழுத்திப் பிடிக்கவும்.
பெப்பர் ஸ்ப்ரே (Pepper Spray):
- பெப்பர் ஸ்ப்ரே பாட்டில்கள் பெண்களின் தற்காப்பு சாதனங்களில் மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
- அவசர காலங்களில் தாக்குதல் நடத்துபவரின் கண்களில் இந்த பெப்பர் ஸ்ப்ரேவை தெளித்தால், அவரது கண்களில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.
- ஆபத்தின் தீவிரத்தைப் பொறுத்து, தாக்குதல் நடத்துபவரின் கண்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் தெளித்து பெண்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ளலாம்.
ஃபிங்கர்டிப் மோதிரங்கள் (Fingertip Rings):
- திடீரென்று ஆபத்தை எதிர்கொள்ளும் பட்டத்தில் பிற பாதுகாப்பு சாதனங்களை பெண்கள் பயன்படுத்த முடியாமல் போகலாம்.
- ஆனால், பார்ப்பதற்கு கூர்மையான நகங்கள் போல காட்சியளிக்கும் கடினமான இந்த 'ஃபிங்கர்டிப் மோதிரங்கள்' உதவாமல் போகாது.
- பெண்கள் இரவில் தனியாக வெளியே செல்ல நேரிட்டால், இந்த ஃபிங்கர்டிப் மோதிரங்களை நகங்களில் அணிந்துகொண்டு செல்லலாம்.
- இவை அவசர காலங்களில் விரைவாக செயல்பட்டு எதிர்த்தாக்குதல் நடத்த இவை பேருதவியாக உள்ளன.
ஸ்டீலோடீல் கீசெயின் (Stealodeal Keychain):
- நெருக்கடியான காலங்களில் பெண்களுக்கு இந்த ஸ்டீலோடீல் கீசெயின் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- இதில் டார்ச், ஸ்க்ரூடிரைவர், கத்தி, பாட்டில் ஓப்பனர் போன்ற பல்வேறு கருவிகள் உள்ளன.
- இது மிகவும் எடை குறைவாக இருப்பதால் வெளியில் செல்லும் போது எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.
ரெட் சில்லி ஸ்ப்ரே (Red Chilli Spray):
- சிறுமிகள் மற்றும் பெண்கள் வெளியில் செல்லும்போது இந்த ரெட் சில்லி ஸ்ப்ரே பாட்டிலை பையில் எடுத்துச் செல்வது நல்லது.
- இரவில் தனியாகப் பயணிக்கும் போது மர்ம நபர்களால் தாக்கப்பட்டால், உடனடியாக அவர்களது கண்களில் இந்த ஸ்ப்ரேயை தெளிப்பதன் மூலம் அவர்களது கண்களில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டதுபோன்ற எரிச்சலை உண்டாக்கும்.
- ஆபத்தின் தீவிரத்தைப் பொறுத்து, நீங்கள் அதை அவர்களின் கண்களில் தெளித்துவிட்டு ஆபத்தில் இருந்து வெளியேறலாம்.
குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள கையடக்க பாதுகாப்பு சாதனங்கள் அவசர காலங்களில் பெண்களை பாதுகாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற வணிக செயலிகளிலும்கூட கிடைக்கின்றன. தரம், வடிவமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து வெவ்வேறு விலைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: டைம்ஸ் சதுக்கத்தில் நீங்களும் பேனர் வைக்கணுமா? ரொம்ப ஈஸி தான்!