ETV Bharat / technology

இப்போவாவது இத பண்ணிடுங்க..ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு! - Aadhaar Ration Card Link

Aadhaar Ration Card Link Date Exten: ஆதார் எண்ணுடன், ரேஷன் கார்டுகளை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Aadhaar Ration Card Link File Image
Aadhaar Ration Card Link File Image (Credits - UIDAI X Page)
author img

By ETV Bharat Tech Team

Published : Aug 27, 2024, 10:00 PM IST

சென்னை: ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பால் போலி ரேஷன் கார்டுகளை குறைக்க வாய்ப்பு உள்ளது என்று ரேஷன் கார்டுகளை ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள்ளாக ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான நடைமுறையை முடிக்க திட்டமிடப்பட்ட. இருந்த போதிலும் தற்போது, ஆதார் எண்ணுடன், ரேஷன் கார்டுகளை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே, பலரும் தங்களது ரேஷன் கார்டுகளை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர்.

ஆனால் இன்னும் ஆதார்-ரேஷன் கார்டை இணைக்காதவர்கள் அந்த செயல்முறையை விரைந்து செய்துமுடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே ரேஷன் கடை, இ-சேவை மையம் மற்றும் மாநில பொது விநியோக அமைப்பு (TNEPDS) இணையம் என ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் நடைமுறைகளில் தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் ரேஷன் கார்டு-ஆதார் இணைப்பை எளிதாக செய்ய முடியும்.

ஆன்லைன் நடைமுறை:

  • TNPDS-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பு என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
  • உங்கள் ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட்டு எண்டர் ஆப்சனை கிளிக் செய்யவும்.
  • இதன் தொடர்ச்சியாக வரும் பக்கத்தில் காட்டப்படும் உங்களது குடும்ப பட்டியலில் உள்ளவர்களின் பெயரை ஒவ்வன்றாக தேர்ந்தெடுத்து, அவர்களது ஆதார் எண்களை உள்ளிடவும்.
  • இதன் பின்னர் கேட்கப்படும் தகவல்களை நிரப்பி சமர்ப்பி என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
  • அதன் தொடர்ச்சியாக, உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
  • OTP சரிபார்ப்புக்குப் பிறகு மீண்டும் சமர்ப்பி என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
  • உங்களது தகவல்களை நீங்கள் சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பம் உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள்.
  • இப்போது உங்கள் ஆதார் எண், ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுவிடும்.

ஆஃப்லைன் நடைமுறை:

  • உங்களுக்கு அருகில் உள்ள ரேஷன் கடை அல்லது இ-சேவை மையத்திற்கு செல்லவும்.
  • அங்கு உங்களது ரேஷன் அட்டை மற்றும் ஆதார் அட்டையின் நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்கவும்.
  • இதனை அடுத்து, பயோமெட்ரிக் இயந்திரத்தில் உங்கள் விரலை வைத்து, கை ரேகை மற்றும் விவரங்கள் சரிபார்க்கப்படும்.
  • உங்களது விவரங்கள் சரிபார்க்கப்பட்டபிறகு, உங்கள் ஆதார் எண், ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுவிடும்.

ஆதார் எண், ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படி சரிபார்ப்பது: நீங்கள் பதிவு செய்த பின்னர், TNPDS-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று அல்லது உங்கள் உள்ளூர் ரேஷன் கடைக்குச் சென்று உங்கள் ஆதார் எண் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதைச் சரிபார்க்கலாம். இதில், ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அருகிலுள்ள இ-சேவை மையத்திற்குச் சென்று உதவி பெறலாம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: செப்டம்பர் 14-க்குள்ள இத செஞ்சிருங்க.. இல்லேன்னா சிரமம் தான்.. ஆதார் அட்டையை புதுப்பிப்பது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.