ETV Bharat / technology

ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் பிக்கப் டிரக்குகள்.. சிறப்பம்சங்கள் என்ன? - Pick Up Trucks Under 10 Lakhs - PICK UP TRUCKS UNDER 10 LAKHS

Pick Up Trucks Under 10 Lakhs Rupees: சிறு வணிகர்களுக்கான ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் ஐந்து சிறிய ரக பிக்கப் டிரக்குகளைப் பற்றி இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.

10 லட்சத்திற்கும் குறைவான சிறிய பிக்கப் டிரக்குகள்
10 லட்சத்திற்கும் குறைவான சிறிய பிக்கப் டிரக்குகள் (Credits - Ashok Leyland, Tata and Mahindra)
author img

By ETV Bharat Tech Team

Published : Aug 22, 2024, 8:05 PM IST

ஹைதராபாத்: நீங்கள் ஒரு சிறு தொழில் தொடங்கப் போகிறீர்கள், இதற்காக உங்களுக்கு ஒரு சிறிய சரக்கு வாகனம் தேவை என்றால், தற்போது உள்ள மோட்டார் சந்தையில் உங்களுக்கு பல்வேறு சிறப்பம்சங்களுடன் வாகனங்கள் உள்ளன. அதில் சிறு வணிகர்களுக்கு ஏற்றார்போல, ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையுள்ள ஐந்து சரக்கு வாகனங்கள் பற்றி பின்வருவனவற்றில் காணலாம்.

டாடா ஏஸ் கோல்ட்
டாடா ஏஸ் கோல்ட் (Credits - TATA)

டாடா ஏஸ் கோல்ட் (Tata Ace Gold): டாடா கமர்சியல் வெஹிக்கில் (Tata Commercial Vehicle) வழங்கும் இந்த சிறியவகை சரக்கு வாகனமான டாடா ஏஸ் கோல்ட் மக்களின் முதல் தேர்வாக உள்ளது. இது 'குட்டி யானை' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சரக்கு வாகனம் 694 சிசி மல்டி-பாயின்ட் ஃப்யூவல் இன்ஜெக்க்ஷன், 4-ஸ்ட்ரோக் வாட்டர் கோல்டு இன்ஜின், 30hp பவர் மற்றும் 55NM டார்க்கை வழங்குகிறது. மேலும், இது 1,630 கிலோ வாகன எடையில் CNG மற்றும் 1,615 கிலோ வாகன எடையிலான பெட்ரோல் எஞ்சின் ஆகிய இரண்டு வேரியண்ட்களில், ரூ.3.99 லட்சம் முதல் ரூ.6.69 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மஹிந்திரா ஜீட்டோ
மஹிந்திரா ஜீட்டோ (Credits - Mahindra)

மஹிந்திரா ஜீட்டோ (Mahindra Jeeto): மஹிந்திராவின் பிரபலமான சிறிய பிக்கப் டிரக்கான மஹிந்திரா ஜீட்டோ இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பிக்கப் டிரக் ரூ.4.38 லட்சம் முதல் ரூ.5.08 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது 625 சிசி 4 ஸ்ட்ரோக், பாசிட்டிவ் இக்னிசியன் என்ஜின் (positive ignition engine) அமைப்பை பெற்றுள்ளது. இது 20.1hp பவர் மற்றும் 44NM டார்க்கை வழங்குகிறது. இந்த பிக்கப் டிரக் 1,485 கிலோ வாகன எடையை இழுக்கும் திறன் கொண்டது.

மாருதி சுஸுகி சூப்பர் கேரி
மாருதி சுஸுகி சூப்பர் கேரி (Credits - Maruti Suzuki)

மாருதி சுஸுகி சூப்பர் கேரி (Maruti Suzuki Super Carry): மாருதி சுசுகி நிறுவனம் அதன் சூப்பர் கேரி சிறியரக பிக்கப் டிரக் மூலம் கமர்சியல் வெஹிக்கில் சந்தைக்குள் நுழைந்தது. மாருதி தனது சூப்பர் கேரி பிக்கப் டிரக்கை 1.196 சிசி, ஜி12பி சீரிஸ் என்ஜினுடன் விற்பனை செய்து வருகிறது. இந்த என்ஜின் பெட்ரோல் மற்றும் CNG எரிபொருள் இரண்டிலும் கிடைக்கிறது. பெட்ரோலுடன் 72hp பவர் மற்றும் 98NM டார்க்கை உற்பத்தி செய்கிறது. அதேநேரம், சிஎன்ஜியுடன் இந்த என்ஜின் 64hp பவரையும் 85NM டார்க்கையும் தருகிறது. 1,600 கிலோ எடையை இழுக்கும் திறன் கொண்ட இந்த பிக்கப் டிரக் ரூ.4.14 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையாக விற்பனையாகிறது.

டாடா இன்ட்ரா 30
டாடா இன்ட்ரா 30 (Credits - TATA)

டாடா இன்ட்ரா 30 (Tata Intra 30): டாடாவின் மற்றொரு சிறிய பிக்கப் டிரக், சிறந்த பேலோட் திறனுடன் (excellent payload capacity) 1.5 லிட்டர், 4 சிலிண்டர், BS-6 எமிஷன் அடிப்படையிலான டீசல் எஞ்சினைப் பெற்றுள்ளது. இது 70hp பவரையும், 140NM டார்க்கையும் வழங்குகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பிக்கப் டிரக் 1,300 கிலோ எடை வரை சுமக்கும் திறன் கொண்டது. விலையைப் பொறுத்தவரையில், இது ரூ.7.30 லட்சம் முதல் ரூ.7.62 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அசோக் லேலண்ட் தோஸ்த்+
அசோக் லேலண்ட் தோஸ்த்+ (Credits - Ashok Leyland)

அசோக் லேலண்ட் தோஸ்த்+ (Ashok Leyland Dost+): பட்டியலில் கடைசியாக அசோக் லேலண்டின் சக்திவாய்ந்த பிக்கப் டிரக்கான தோஸ்த்+ உள்ளது. இது 1.5 லிட்டர், 3 சிலிண்டர் BS-6 எமிஷன் அடிப்படையிலான டீசல் என்ஜினில் மட்டுமே கிடைக்கிறது. இது 68.9hp பவரையும், 170NM டார்க்கையும் வழங்குகிறது. இந்த பிக்கப் டிரக் 1,500 கிலோ எடை வரையில் சுமக்கும் திறன் கொண்டது. விலையைப் பொறுத்தவரையில், ரூ.7.75 லட்சம் முதல் ரூ.8.25 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: காருக்குள்ளேயே பாடி மசாஜ்! AUDI Q8 facelift மாடலின் சிறப்பம்சங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.