ETV Bharat / technology

ஆழ்கடலை ஆராயப்போகும் சமுத்ரயான்: சந்திரயான் , ககன்யான் வரிசையில் அடுத்த முயற்சி

Samudrayaan: ஆழ்கடல் ஆராய்ச்சியில் புதிய இலக்கை தொடவிருக்கும் இந்தியா தனது ஆழ்கடல் ஆராய்ச்சி வாகனமான சமுத்ரயானை வெகு விரைவில் சோதனை வெள்ளோட்டத்திற்காக கடலில் இறக்க உள்ளது. இந்த ஆராய்ச்சி கருவியின் விவரங்களை பதிவு செய்கிறது ஈடிவி பாரத்.

மத்ஸ்யா வாகனம்
மத்ஸ்யா வாகனம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 6:59 PM IST

Updated : Feb 23, 2024, 7:50 PM IST

ஆழ்கடலை ஆராயப்போகும் சமுத்ரயான்

சென்னை: தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சி நிறுவனம் (National Institute of Ocean Technology) ஆழ்கடலில் இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்திற்கு சாத்தியமானவற்றை ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்திய அரசின் பூகோள அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனம் சமீபத்தில் தனது ஆய்வின் போது, 7 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன AN 32 விமான பாகங்களை எதேச்சையாக கண்டு பிடித்தது குறித்து விரிவான செய்தியை ஈடிவி பாரத் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் ஆராய்ச்சியின் ஒரு அங்கமாக ஆழ்கடலுக்கு மனிதர்களை அனுப்பும், சமுத்ரயான் திட்டம் செயலாக்கத்திற்கு தயாராகி வருகிறது.

ஆழ்கடலுக்கு ஏன் செல்ல வேண்டும்?: நிலத்தில் இருப்பதைப் போன்றே ஆழ்கடலிலும் வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த வளங்கள் குறித்து ஆய்வதே இதன் முதன்மை நோக்கமாகும். இத்திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்ட கடல் பரப்பில் உள்ள நுண் உலோகங்கள், நிக்கல், மாங்கனீசு, கோபால்ட் போன்றவற்றை கண்டறிய முடியும். குறிப்பாக ஒவ்வொரு தாதுக்களும் அதற்கேற்ற சூழலில் தான் இருக்கும். இந்திய பெருங்கடலில் poly metallic nodules எனப்படும் வளங்கள் நிறைந்திருக்கும். வங்க கடலில் gas hydrates எனப்படும் எரிவாயு அதிக அளவில் இருக்கும்.

மாங்கனீசு போன்ற தாதுக்கள் மிகவும் அமைதியான ஆழ்கடல் பகுதியில் தான் இருக்கும். அவற்றையெல்லாம் நீர்மூழ்கி கப்பல் மூலமாக பார்க்க முடியாது. ஆனால் ஆழ்கடல் ஆராய்ச்சிகளின் போது எந்தெந்த இடங்களில் எந்தெந்த கனிமங்கள் உள்ளன என்பதை எளிதாக கண்டறிய முடியும். இது மட்டுமில்லாமல் புது வகையான கடல்வாழ் உயிரினங்களையும் கண்டறிய முடியும்.

ஆழ்கடல் ஆராய்ச்சியை செய்யவிருக்கும் கருவி எது?: ஆழ்கடல் ஆராய்ச்சிக்காக புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான சென்னையைச் சேர்ந்த தேசிய ஆழ்கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) ‘மத்ஸ்யா 6000’ (MATSYA 6000) என்ற வாகனத்தை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய NIOT இயக்குநர் திரு.ஜி.ஏ.ராமதாஸ், சமுத்ரயான் திட்டம் ரூ.4,800 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

இதற்கான துறைமுக ஒத்திகை (Horbour Trial) இன்னும சில வாரங்களில் சென்னையில் நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடலுக்குள் 6 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் ஆய்வு மேற்கொள்வதே இத்திட்டத்தின் நோக்கமாக இருக்கும நிலையில், முதல் கட்டமாக துறைமுக ஒத்திகையின் போது 500 மீட்டர் ஆழத்தில் இந்த ஒத்திகை நடைபெறும் என கூறினார். இதில் 3 மனிதர்கள், கடலின் ஆழத்திற்கு சென்று தரைப்பரப்பில் உள்ள கனிம வளங்களை நேரடியாக பார்வையிட முடியும்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள NIOT வளாகத்தில் சமுத்ரயான் திட்ட வாகனத்தை நமது செய்தியாளருக்கு காண்பித்து விளக்கிய அவர், இந்த வாகனத்தில் மனிதர்கள் பயணிப்பதற்காக கோள (Sphere) வடிவிலான கலனும் இருக்கும் என விளக்கினார். 6.6 மீட்டர் நீளமும் 210 டன் எடையும் கொண்ட இந்த வாகனம் தொடர்ச்சியாக 48 மணி நேரத்திற்கு நீரில் மூழ்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் திறன்கொண்டது.

குறிப்பாக மனிதர்களை ஏற்றிச்செல்லக் கூடிய கோள (Sphere) வடிவ கலன், முழுவதும் டைட்டானியத்தால் ஆனது. டைட்டானியம் உலோகம், எடை குறைவாகவும் மற்ற உலோகங்களை விட வலுவானதாகவும் இருப்பதால் ஆழ்கடல் ஆராய்ச்சியில் பயனுள்ளதாக இருக்கும் என முனைவர் ராமதாஸ் விளக்கினார். இந்த களத்தில் பயணிப்பதற்காக முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் பைலட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் NIOT விஞ்ஞானிகள் இருவருக்கு பைலட் பயிற்சி அளிப்பதார் எனவும் அவர் கூறினார்.

6 ஆயிரம் மீட்டர் ஆழத்திற்கு செல்லும். 3 மனிதர்களை சுமந்து செல்லும் இந்த மத்ஸ்யா 6000 வாகனத்தில், ஆழ்கடலை பார்ப்பதற்கான மூன்று துவாரங்கள், ஆழ்கடலை ஆராய்வதற்கான இரண்டு மேனிபுலேட்டர், கனிம வள மாதிரிகளை சேகரிப்பதற்கான தட்டு (Tray), ஆழ்கடலையும், வளங்களையும் புகைப்படம் எடுப்பதற்காக கேமரா மற்றும் விளக்குகள், போன்ற அம்சங்கள் இருக்கும்.

ஆழ்கடல் ஆராய்ச்சி வாகனம் மத்ஸ்யா எப்போது களமிறங்கும்?: தற்போது துறைமுக வெள்ளோட்டம் நிலையை சமுத்ரயான் திட்டம் நெருங்கியுள்ளது. இது வெற்றிகரமாக செயலாக்கம் பெறும் பட்சத்தில் இந்த ஆண்டிலேயே சமுத்ரயான் திட்டத்தின் அடுத்தடுத்த நகர்வுகள் வேகம் பெறும். அதிகபட்சமாக 2026ம் ஆண்டுக்குள் முழு வீச்சில் ஆய்வுகளை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆழ்கடல் கனிமவளங்களை உடனே எடுத்து பயன்படுத்துவது சாத்தியமா?: இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த NIOT அறிவியல் ஆய்வளர் என்.ஆர்.ரமேஷ், ஆழ்கடலில் உள்ள வளங்களை ஆராய்வதே தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் நோக்கம். ஆழ்கடல் வளங்களை வெளியில் எடுத்து உபயோகப்படுத்துவதால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்றும் ஆராய்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இது செயல்பாட்டிற்கு வருவதற்கான இன்னும் ஏராளமான படிநிலைகள் உள்ளன என கூறினார். தற்போதைய நிலையில், இந்திய பெருங்கடலில் , இந்தியாவின் ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ள கடற்பரப்பை ஆராய்ந்து, கனிம வளங்களை அடையாளப்படுத்தியுள்ளதாகவும் ரமேஷ் விளக்கம் அளித்தார். நாட்டின் பாதுகாப்பு என்பது ராணுவத்தை தாண்டி, அறிவியல், ஆராய்ச்சி, கனிமவளம் போன்றவற்றில் தன்னிறைவு பெறுவதையும் சார்ந்ததாக மாறி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சமுத்ரயான் திட்டம், ஆழ்கடலுக்கு மனிதர்களை அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் இணைக்கும். ஏற்கெனவே இந்த பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன.

இதையும் படிங்க: பதிவிறக்கத்தில் வீழ்ச்சி காணும் X தளம்.. டாப் 10-க்குள் நுழைந்த த்ரெட்ஸ் ஆப்!

Last Updated : Feb 23, 2024, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.