சென்னை: வீட்டில் பணத்தை சேமித்து வைத்தால் கொள்ளை போய்விடுமோ என நினைத்து வங்கியில் பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணி சேமித்து வைக்கிறோம். ஆனால், இணையதளம் மூலமாக கொள்ளையடிப்பவர்கள் நம்முடைய கைபேசியை ஹேக் செய்து வங்கியிலுருந்து பணத்தை திருடிச் செல்கின்றனர்.
அந்த வகையில், ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலமாக நம்முடைய பணத்தை ஏமாற்றி பறிக்கின்றனர். இதனிடையே, ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருவதாக முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு விழிப்புணர்வு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக உறவினர்கள், நெருக்கமானவர்கள் போல ஏஐ மூலம் வீடியோ பதிவு செய்து, அவர்களுடையே குரலிலேயே தொடர்பு கொள்வார்கள். பின்னர் அவசரமாக பணம் தேவைப்படுவதாகக் கூறி பணம் கேட்பார்கள். இதனை யாரும் நம்ப வேண்டாம். இத்தகையவர்கள் சைபர் குற்றவாளிகள் என விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஏஐ தொழில்நுட்ப வீடியோ கால் மூலம் நடைபெறும் சைபர் குற்றங்கள் குறித்து, பல்வேறு கேள்விகளை சைபர் கிரைம் வழக்கறிஞர் கார்த்திகேயனிடம் ஈடிவி பார்த் முன்வைத்தது. அதன்படி,
டீப் ஃபேக்ஸ் (Deep fakes): டீப் ஃபேக்ஸ் தொழில்நுட்பம் புதிய தொழில்நுட்பம் இல்லை. ரொம்ப வருடங்களாக உள்ளது. ஆனால், அதனை பயன்படுத்துவதற்கான விலை அதிகமாக இருந்தது. தற்போது அவை இலவசாக பயன்படுத்த முடிவதால் பலர் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
இதற்காக 100க்கும் மேற்பட்ட செயலிகள் உள்ளன. அதனை பதிவிறக்கம் செய்து, வாட்சப் டிபியில் (DP) உள்ள புகைப்படத்தை எடுத்து input-ல் வைத்துக்கொண்டு, வேறு ஒரு நபர் பேசுவதையும் இணைத்து ஏஐ தொழில்நுட்பம் மூலம் நாம் பேசுவது போல் வரும். இவை கண்டறிய முடியாதது என்பதெல்லாம் இல்லை.

இளைஞர்கள் எளிதாக அந்த வீடியோவில் Deep fake செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிந்நு விடுவார்கள். குறிப்பாக, 18 முதல் 30 வயது வரையிலான இளைஞர்கள் எளிதாக கண்டறிவார்கள். காரணம், அவர்களுக்கு இணையதளம் குறித்த அறிவு இருக்கும். ஆனால், 40 வயதுக்கும் மேற்பட்டவர்கள் அதிகமாக ஏமாற்றப்படுகிறார்கள்.
வீடியோ காலில் பேசுவதால் ஒருவேளை ஏமாற்றப்பட்டாலும் எண்களை வைத்து கண்டறிந்து கொள்ளலாம் என நினைக்கிறார்கள். இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் 90 சதவீதம் பேர் வெளிநாடுகளிலிருந்து இயங்குகிறார்கள். பணம் கொடுக்க தயாராகிவிட்டதும், தன்னுடைய வங்கி எண் முடக்கப்பட்டுள்ளது என்று கூறி, வேறு வங்கி எண் தருகிறேன் அதில் பணத்தை போடுங்கள் என கூறுவார்கள்.
இதுபோன்ற நிலையில், வாட்ஸ்அப்பில் (WhatsApp) வரும் செய்திகள் மற்றும் வீடியோ காலில் உள்ள DP-யை மட்டும் பார்க்காமல், தொலைபேசி எண்ணையும் நமக்கு தெரிந்தவர்களின் எண்கள் தானா என்பதை பார்க்க வேண்டும். நமது செல்போனில் பதிவு (Save) செய்யாத எண்களில் இருந்து வீடியோ கால் வந்தாலே கவனமாக இருக்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.
வாய்ஸ் கால் (Voice call): தொடர்ந்து பேசிய அவர், "வீடியோ கால் மட்டுமல்லாமல், வாய்ஸ் கால் மூலமாகவும் நம்மை ஏமாற்றுகிறார்கள். அதாவது, முதலில் நமக்கு ஒரு வாய்ஸ் கால் வரும். அதில் நம்முடைய குரலை பதிவு செய்து கொள்கிறார்கள். பின்னர், நம்முடைய சமூக வலைத்தளப் பக்கம் மூலம் நமது நண்பர்களிடம் நம்மைப் போல் பேசி பணத்தை கேட்டுப் பெறுவார்கள். உதராணமாக, வெளியூருக்கு வந்தேன் பணம் தொலைந்துவிட்டது, உங்களுடைய எண் தான் உள்ளது பணம் போட்டுவிடுங்கள் எனக் கூறி மோசடி செய்வார்கள்" என எச்சரித்தார்.
Debit Message apk file: மேலும், "நமது வங்கிக் கணக்கிலிருந்து பணம் டெபிட் (எடுக்கப்பட்டுள்ளதாக) என ஒரு குறுஞ்செய்தி வரும். ஒரு வேளை நீங்கள் அந்த டெபிட் (Debit) செய்யவில்லை என்றால் இதை கிளிக் செய்யுங்கள் என ஒரு லிங் (link) வரும். அதனை கிளிக் செய்தவுடன் நமது கைபேசியில் Apk File பதிவிறக்கம் ஆகிவிடும்.
பின்னர், அதன் மூலம் ஹேக் செய்து, ஏதேனும் வங்கி செயலி நம்முடைய கைபேசியில் இருக்கிறதா என்பதை பார்க்கும். OTP வந்தாலும் அதனையும் எடுத்துக்கொள்ளும். பரிவர்த்தனைக்காக தேவைப்படும் pin-ஐ, ஏற்கனவே நீங்கள் போட்டதை (சேகரித்து), பயன்படுத்தி பணத்தை முற்றிலுமாக எடுத்துக் கொள்வார்கள்" எனக் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி என புகார்.. சென்னையில் நடந்தது என்ன?