ஹைதராபாத்: இந்திய குடிமக்களின் முக்கியமான ஆவணங்களில் ஆதார் கார்டும் ஒன்று. போஸ்ட் ஆபீஸ், பத்திரப்பதிவு, பேங்க், மருத்துவமனை என பல்வேறு இடங்களில் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. மேலும், KYC சரிபார்ப்பிற்கு தேவைப்படும் முதன்மை ஆவணங்களில் ஆதார் கார்டு தான் முன்னிலையில் இருக்கிறது. எனவே, ஆதாரில் உள்ள உங்களுடைய பெயர், முகவரி, மொபைல் எண் போன்ற விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும்.
மேலும், ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறைகள் 2016இன் படி, ஆதார் அட்டை வைத்திருக்கும் நபர்கள், ஆதார் பதிவு தேதியிலிருந்து ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒருமுறை தங்கள் அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆவணங்களைப் புதுப்பிக்க வேண்டும். அதன்படி, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டை புதுப்பிப்புக்காக மக்களை வற்புறுத்தி வருகிறது.
#UIDAI extends free online document upload facility till 14th September 2024; to benefit millions of Aadhaar Number Holders. This free service is available only on #myAadhaar portal. UIDAI has been encouraging people to keep documents updated in their #Aadhaar. pic.twitter.com/1XOfzhRnRp
— Aadhaar (@UIDAI) August 23, 2024
ஆதார் புதுப்பிப்பு கடைசி தேதி: வரும் செப்டம்பர் 14ஆம் தேதி myAadhaar போர்ட்டலில் ஆதார் புதுப்பிப்புக்கான ஆவணத்தை இலவசமாக பதிவேற்றுவதற்கான கடைசி தேதியாகும். செப்டம்பர் 14ஆம் தேதிக்குப் பிறகு, கட்டணம் செலுத்தி ஆதார் அட்டைக்கான அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும்.
செப்டம்பர் 14க்குப் பிறகு உள்ள நடைமுறை: ஆதார் அட்டைகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட அவர்களின் அடையாள மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களை பதிவேற்றம் அல்லது புதுப்பிக்குமாறு ஆதார் அட்டைதாரர்களை UIDAI கேட்டுக் கொண்டுள்ளது. செப்டம்பர் 14, 2024க்கு முன் ஆதார் அட்டை ஆவணங்களை ஒரு நபர் புதுப்பிக்கவில்லை என்றால், எனது ஆதார் போர்ட்டலில் ரூ.25 அல்லது இயற்பியல் ஆதார் மையங்களில் ரூ.50 செலுத்தி, அவர்களின் அடையாள மற்றும் முகவரிச் சான்று ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும்.
ஆதார் அட்டையை புதுப்பிக்க தேவையான ஆவணங்கள்: உங்கள் ஆதார் அட்டை ஆவணங்களை புதுப்பிக்க myAadhaar போர்ட்டலில் நீங்கள் பதிவேற்ற வேண்டிய ஆவணங்கள் கீழே உள்ளன.
அடையாள ஆவணம் (ID Proof) பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று:
- பாஸ்போர்ட்
- ஓட்டுநர் உரிமம்
- பான் கார்டு
- வாக்காளர் அடையாள அட்டை
- தொழிலாளர் அட்டை
- மதிப்பெண் சான்றிதழ்
- திருமணச் சான்றிதழ்
- ரேஷன் கார்டு
முகவரி ஆவணம் (Address Proof) பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று:
- பேங்க் பாஸ்புக்
- மின்சாரம் அல்லது எரிவாயு இணைப்பு கட்டணம்
- பாஸ்போர்ட்
- திருமணச் சான்றிதழ்
- ரேஷன் கார்டு
- சொத்து வரி ரசீது
ஆதார் அட்டையை அப்டேட் செய்யும் முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி பின்பற்றுவதன் மூலம் உங்கள் அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆவணங்களை myAadhaar போர்ட்டலில் இலவசமாக புதுப்பிக்கலாம்.
படிநிலை 1: myAadhaar போர்ட்டலுக்குச் செல்லவும்.
படிநிலை 2: எண்டர் ஆப்சனை (Enter Option) கிளிக் செய்யவும். உங்கள் ஆதார் எண், கேப்ட்சா (captcha) குறியீட்டை எண்டர் செய்து 'செண்ட் OTP' ஆப்சனை கிளிக் செய்யவும். பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் எண்ணிற்கு OTP வந்ததும், அதனை பதிவிட்டு எண்டர் ஆப்சனை கிளிக் செய்யவும்.
படிநிலை 3: ஆவண புதுப்பிப்பு (Document Update) என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
படிநிலை 4: வழிகாட்டுதல்களை படித்த பிறகு நெக்ஸ்ட் (Next) ஆப்சனை கிளிக் செய்யவும்.
படிநிலை 5: உங்களது விவரங்களைச் சரிபார்த்த பிறகு பக்கத்தில் கொடுக்கபட்டுள்ள, 'மேலே உள்ள விவரங்கள் சரியானவை என்பதை நான் சரிபார்க்கிறேன்' (I verify that the above details are correct) என்ற பாக்ஸ்சை கிளிக் செய்து, நெக்ஸ்ட் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
படிநிலை 6: அடையாளச் சான்று (ID Proof) மற்றும் முகவரிச் சான்று (Address Proof) ஆகியவற்றிற்கான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து சமர்ப்பி (Submit) என்ற ஆப்சனை கிளிக் செய்தால், உங்கள் ஆதார் அட்டை இலவசமாக அப்டேட் செய்யப்பட்டுவிடும். இதனை அடுத்து, அப்டேட் செய்யப்பட்ட உங்கள் ஆதார் அட்டை ஏழு வேலை நாட்களுக்குள் புதுப்பிக்கப்படும்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க : ஆதார் அப்டேட் விவகாரம்.. கடைசி நேரத்தில் வந்த முக்கிய அறிவிப்பு!