ETV Bharat / technology

சிலிண்டர் காலியாவதை இனி இப்படி தெரிந்து கொள்ளலாம்.. மதுரை பள்ளி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு! - Cylinder depletion - CYLINDER DEPLETION

Cylinder depletion: வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் தீர்ந்து போவதற்கு முன்பாகவே எச்சரிக்கை செய்யும் கருவி ஒன்றை மதுரையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

சிலிண்டர் எச்சரிக்கை கருவி
சிலிண்டர் எச்சரிக்கை கருவி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2024, 3:50 PM IST

Updated : Aug 23, 2024, 7:26 PM IST

மதுரை: நமது ஊர்களில் பெரும்பாலும் ஒற்றை சிலிண்டர் வைத்துள்ள அடித்தட்டு மற்றும் நடுத்தர குடும்பங்களே அதிகம். சமையல் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென கேஸ் தீர்ந்து விட்டால் பெரும் சிக்கலாகி விடும்.

மாணவன் மித்ரன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இது போன்ற சிக்கலை தவிர்க்கும் வகையில், ஏதேனும் தீர்வு கிடைக்காதா என இல்லத்தரசிகள் ஏங்கிய நாட்கள் உள்ளன. இந்த சிக்கலை தவிர்க்கும் விதமாக, மதுரை மாவட்டம், நரிமேடு பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் மித்ரன், கேஸ் சிலிண்டர் உபயோகிக்கும் நபர்களுக்காக 'Cylinder depletion' என்ற எச்சரிக்கை கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

இந்த எச்சரிக்கை கருவியின் மீது சிலிண்டரை வைத்துவிட்டால் சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் குறையும் போது 10 நாட்களுக்கு முன்பு சிக்னல் விளக்கு எரிவதுடன் பட்சர் மூலம் ஒலி எழுப்பும் என்கிறார் மாணவர்.

இது குறித்து மாணவர் மித்ரன் கூறுகையில், "எங்கள் வீட்டில் ஒரு சிலிண்டர் தான் உள்ளது. ஆகையால், பல நாட்கள் கேஸ் தீர்ந்து போய்விட்டால் சமையல் செய்ய என்னுடைய அம்மா படுகின்ற பாடு மிகுந்த வேதனைக்குரியது. ஆகையால், அதனைத் தடுப்பதற்காக நானே ட்ராப்ட் ஒன்றை வரைந்து, எனது பள்ளியின் 'கண்டுபிடிப்புகளுக்கான வழிகாட்டி' ஆசிரியர் அப்துல் ரசாக்கிடம் காண்பித்தேன்.

அதன் அடிப்படையில், அதற்குத் தேவையானவை மரப்பலகை, சிக்னல் விளக்கு, சிறிய மோட்டார் ஆகியவை ஆகும். இந்த வட்டப் பலகையின் மீது சிலிண்டரை வைத்துவிட்டால் சிலிண்டரின் உள்ளே இருக்கும் கேஸ் குறையும் போது 10 நாட்களுக்கு முன்பு சிக்னல் விளக்கு எரிவதுடன், பட்சர் மூலமாக ஒலி எழுப்பும். அதனைக் கணக்கில் கொண்டு சிலிண்டர் தீர்ந்து போனதை நாம் உறுதி செய்து கொண்டு, அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்யலாம்.

ஒற்றை சிலிண்டர்களை மட்டுமே வைத்துள்ள குடும்பங்களுக்கு இந்தக் கருவி பெரும் வரப்பிரசாதமாக இருக்கும். எனது பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் முதல்வர், தாளாளர் ஆகியோர் அளித்த ஊக்கமே இந்த கண்டுபிடிப்புக்கு முக்கிய காரணம். மேலும், பல்வேறு கண்டுபிடிப்புகளை மேற்கொள்வதற்கு எனக்குள் உத்வேகம் பிறந்துள்ளது" என தெரிவித்தார்.

இதுகுறித்து ஆசிரியர் கூறுகையில், "சிலிண்டர் அழுத்தத்தின் பொருட்டு ஒலி எழுப்பும் இந்தக் கருவியை உருவாக்குவதற்கு ரூ.1,000 மட்டுமே செலவாகிறது" என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க : “2026-க்குப் பிறகு அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்” - டிடிவி தினகரன் பரபரப்பு பேச்சு! - TTV Dhinakaran

Last Updated : Aug 23, 2024, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.