ETV Bharat / technology

ஓபென் Rorr EZ: ஃபிரெஷ் லுக்குடன் இரண்டாவது மின்சார பைக்கை களமிறக்கும் நிறுவனம்!

ஓபென் எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய ரோர் EZ (Rorr EZ) மின்சார பைக்கை நவம்பர் 7 அன்று அறிமுகம் செய்கிறது.

OBEN ELECTRIC TO LAUNCH RORR EZ EV BIKE ON NOVEMBER SEVEN article thumbnail
ஓபென் எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய ரோர் EZ பைக்கின் அறிமுக தேதியை அறிவித்துள்ளது. (OBEN ELECTRIC)
author img

By ETV Bharat Tech Team

Published : Nov 5, 2024, 10:29 AM IST

ஓபென் எலக்ட்ரிக் (Oben Electric), இந்தியாவின் உள்நாட்டு மின்சார வாகன உற்பத்தியாளர் ஆகும். இவர்கள் தங்களின் பழைய ரோர் மாடலின் புதிய பதிப்பை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். இதற்காக டீசரையும் யூடியூப் தளத்தில் நிறுவனம் பதிவேற்றியுள்ளது. அதன்படி, புதிய மாடல் ரோர் EZ (Rorr EZ) எலெக்ட்ரிக் பைக், நவம்பர் 7-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பைக் தினசரி கம்யூட்டர் பிரிவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சிறந்த செயல்திறன் வரம்புடன் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட Rorr EV நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ஓபன் எலக்ட்ரிக் நிறுவனம் தனது இரண்டாவது EV பைக்கை அறிமுகம் செய்யத் தயாராகியுள்ளது.

இந்திய சந்தையில் ஓலா சமீபத்தில் தங்களின் புதிய மாடல் பைக்குகளை அறிமுகம் செய்தது. மின்சார ஸ்கூட்டரில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ஓலா, தற்போது பைக் மாடல்களுக்கும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது. இதனால், ஓபென் நிறுவன பைக்குகளுக்கு ஓலா எலெக்ட்ரிக் பைக்குகள் சந்தையில் போட்டியாக இருக்கும்.

இந்த சூழலில், புதிதாக அறிமுகம் செய்யப்படும் Rorr EZ மின்சார பைக்கின் அம்சங்கள் அல்லது பிற விவரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், ரோர் EZ அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பயண அனுபவத்தை வழங்க சிறந்த செயல்திறன், வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோர் EZ எலெக்ட்ரிக் பைக்கில் உயர் செயல்திறன் கொண்ட எல்எஃப்பி பேட்டரி (Lithium Ferro Phosphate battery) தொழில்நுட்பம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கை நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் முதல் ரூ.1.20 லட்சம் வரையிலான விலையில் அறிமுகம் செய்யலாம் எனக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க
  1. கடினமான சாலைகளும், இலகுவான இலக்கு தான் - ராயல் என்ஃபீல்டு Bear 650 அறிமுகம்!
  2. டிவிஎஸ் ரெய்டர் iGO: 125cc வகையின் அதிவேகமான பைக் இதுதானாம்!
  3. ஆட்டம் காட்டும் சியோமி 15 சீரிஸ்: திக்கித்திணறி நிற்கும் சாம்சங், கூகுள்!

எல்எஃப்பி பேட்டரி தொழில்நுட்பம் கடுமையான வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. எனவே, இந்த பேட்டரிகள் பாதுகாப்பு நிலையை உயர்த்துவதுடன், மின்சார பைக்கிற்கு சிறந்த செயல்திறனையும் வழங்க முடியும்.

பேட்டரிகள், மோட்டார்கள், வாகன கட்டுப்பாட்டு அலகுகள் மற்றும் வேகமான சார்ஜர்கள் போன்ற முக்கியமான பாகங்களை ஓபென் எலக்ட்ரிக் உற்பத்தி செய்துவருவது குறிப்பிடத்தக்கது. இவை துல்லியமாகவும் தரமாகவும் உற்பத்தி செய்யப்படுவதால் தான் ஓபென் பைக்குகள் பெரிய பிரச்சினைகளை இதுவரை சந்திக்கவில்லை என நிறுவனம் கூறியுள்ளது.

etv bharat tamil nadu whatsapp channel link and QR Code
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.