ஹைதராபாத்: ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, தனது ஃபிளாக்ஷிப் எஸ்யூவி ஆடி க்யூ8-ன் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் இந்த எஸ்யூவியை ரூ.1.17 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பல முக்கிய மாற்றங்களை நிறுவனம் செய்துள்ளது, எளிதில் பார்க்க முடியும். இருப்பினும், இயந்திர ரீதியாக எஸ்யூவியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
எக்ஸ்டீரியர்: புதிய ஆடி க்யூ8-ன் ஹை பீம் லேசர் அசிஸ்டன்ஸ் மற்றும் கன்ஃபிகரபுல் லைட் சிக்நேச்சர் உதவியுடன் கூடிய புதிய HD மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்கள் அதன் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அதன் கிரில்லில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய ஆக்டாகனல் துளைகள் (octagonal apertures) மற்றும் 'L' வடிவ செருகல்கள் (L shaped inserts) அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பம்பரில் உள்ள ஏர் இன்டேக் அமைப்பிற்கு புதிய வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பின்புற தோற்றம் குறித்து பார்க்கையில், இது அதன் பழைய மாடலை போலவே உள்ளது, ஆனால் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒளி வடிவமைப்புகளுடன் கூடிய புதிய வகையான நான்கு டிஜிட்டல் OLED லைட்டுகள் பின்புறத்தில் உள்ளதோடு, அவை ஹெட்லைட்களுடன் இணைந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இன்டீரியர்: ஆடி க்யூ8 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் இன்டீரியரை பொறுத்தவரையில், அதன் பழைய மாடலுடன் ஒப்பிடும்போது இது பெரிய அளவில் மாறவில்லை. இருப்பினும், நிச்சயமாக இருக்கைகளில் புதிய அப்ஹோல்ஸ்டரி மற்றும் வெவ்வேறு தையல் முறைகளோடு கூடிய, புதிய வண்ணங்களை காணலாம். ஆடி க்யூ8 மாடலானது ஆடியின் டிவின் MMI தொடுதிரை (Twin MMI Touchscreen), நான்கு காலநிலை கட்டுப்பாடு (four-zone climate control), ஹெட்-அப் டிஸ்ப்ளே (head-up display) மற்றும் ஹீட்டட், வெண்டிலேட்டர் மற்றும் மசாஜ் ஆகிய வசதிகளுடன் கூடிய இருக்கைகள் போன்ற அம்சங்களைப் பெறுகிறது.
மேலும், பேங் மற்றும் ஓலஃப்சென் ஹை-ஃபை ஒலி அமைப்பை (Bang and Olufsen Hi-Fi sound system) பெறுகிறது. இது தவிர, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட க்யூ8 மாடலானது விரிவாக்கப்பட்ட ஆப் ஸ்டோரைக் கொண்டுள்ளது. அத்தோடு ஸ்பாட்டிஃபை (Spotify) மற்றும் அமேசான் மியூசிக் (Amazon Music) போன்ற உள்ளமைக்கப்பட்ட மியூசிக் செயலிகளைக் கொண்டுள்ளது. இதுமட்டும் அல்லாது டிரைவர் அசிஸ்டண்ட்ஸ் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
என்ஜின்: இந்தியாவில் வெளியிடப்படும் புதிய ஆடி க்யூ8 ஃபேஸ்லிஃப்ட் மாடல் நான்கு சக்கரங்களுக்கும் சக்தி அளிக் 8 ஸ்பீட் ஆடோமெட்டிக் கியர்பாக்ஸ் அமைப்புடன் கூடிய, 340hp பவரையும், 500NM டார்க்கையும் வழங்கும் 48 வோல்ட் மைல்ட் ஹைப்ரிட் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள, 3.0 லிட்டர் V6 டர்போ பெட்ரோல் எஞ்சினைப் பெற்றுள்ளது.
விலை: ஆடி க்யூ8 ஃபேஸ்லிஃப்டின் விலையை பொறுத்தவரையில், 1.17 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில், பழைய ஆடி க்யூ8 மாடலை விட ரூ.10 லட்சம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்து, சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபிளாக்ஷிப் எஸ்யூவிக்கு இந்திய சந்தையில் நேரடி போட்டி இல்லை என்றாலும், இது இன்னும் Mercedes-Benz GLE மற்றும் BMW X5 உடன் போட்டியிட முடியும்.