ETV Bharat / technology

புதிய அப்டேட் கொடுத்து; பெரிய அப்டேட்டை தள்ளிப்போட்ட சாம்சங்! One UI 7.0 தகுதியான போன்கள் எவை? - SAMSUNG ANDROID 15 UPDATE

சமீபத்தில் சாம்சங் போன்களுக்கு புதிய One UI 6.1 அப்டேட் வழங்கப்பட்டது. இந்த சூழலில், கேலக்சி போன்களுக்கான ஆண்ட்ராய்டு 15 அப்டேட் குறித்த ஒரு கசப்பான தகவல் கிடைத்துள்ளது.

samsung galaxy android 15 one ui 7
சாம்சங் கேலக்சி ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஒன் யுஐ 7. (Sammyfans)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 22, 2024, 11:26 AM IST

உலகளவில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட் கிடைக்கும், அது எப்போது கிடைக்கும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். கூகுள் பிக்சல் வாடிக்கையாளர்கள், தற்போது ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். முதலில், பிக்சல் போன்களுக்கு வழங்கப்படும் மேம்படுத்தப்பட்ட அப்டேட், அதனைத் தொடர்ந்து சந்தையில் இருக்கும் முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும்.

எப்போதும், கூகுள் பிக்சல் போன்களை அடுத்து, சாம்சங் கேலக்சி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். ஆனால், இம்முறை, புதிய எஸ்25 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியீட்டின்போது தான் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான One UI 7 இயங்குதளம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருமா? வராதா?

இதற்கு முக்கிய காரணம், ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் இயக்க முறைமைகளை சரியாக கவனித்து வரும் 9டூ5கூகுள் தளம் தான். அதாவது, கூகுள் பிக்சல் போன்களை அடுத்து, மோட்டோரோலா, ஏசூஸ், விவோ, ஒப்போ போன்ற போன்கள் வரிசையில் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2024 வருடம் முடிய இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், சாம்சங் தங்கள் ஸ்மார்ட்போன் வெளியீட்டுடன் புதிய One UI 7 அப்டேட்டை வழங்கலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Samsung One Ui 7 update news
சாம்சங் One UI 7 (Samsung Community)

ஒருவேளை சாம்சங் அப்டேட்டுகளை கொடுக்க தயாராகி விட்டதா எனத் தோன்ற வைக்கிறது, சாம்சங்கை தீவிரமாக ஆய்வு செய்யும் SammyFans தளத்தின் சிலத் தகவல்கள். அவர்கள் வெளியிட்டிருந்த ஒரு செய்தியில், "சாம்சங் கேலக்சி உரிமையாளர்களுக்கு சில உற்சாகமான செய்திகள் உள்ளன. ஆண்ட்ராய்டு 15 அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய One UI 7.0 இயங்குதள அப்டேட் வெகு தூரத்தில் இல்லை. நாங்கள் நினைத்ததை விட மிக விரைவாக வருகிறது."

"இரண்டு வெவ்வேறு ஆதாரங்களில் இருந்து தகவல்களைப் பெற்றுள்ளோம். ஒவ்வொன்றும் எங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யும் வகையில் இருக்கின்றன. சாம்சங் மென்பொருள் மேம்பாட்டுக் குழு அக்டோபர் 2024 இறுதிக்குள் ‘பெரும்பாலும் நிலையான’ One UI 7.0 பதிப்பு கிடைக்கும்," என்று தெவித்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

இதையும் படிங்க
  1. கூகுள் குரோம், ஆண்ட்ராய்டு பயனர்களே உஷார்; எச்சரிக்கும் CERT-In: என்ன செய்வது?
  2. கவச் தொழில்நுட்பம்: சிறப்புகள் என்ன? கவரைப்பேட்டை ரயில் விபத்தைத் தடுத்திருக்க முடியுமா?
  3. இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் 5ஜி - மலிவு விலையில் மடிக்கக்கூடிய போன்!

கூகுளின் இரட்டை வேடம்:

கூகுளின் ஹார்டுவேர் மற்றும் மென்பொருளின் கட்டுப்பாடு என்பது பிற OEMகளை விட, தங்கள் தயாரிப்புகளுக்கு நன்மை அளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்ற ரீதியில் இருப்பதாக ஃபோர்ஸ் பத்திரிகையின் சாக் டோஃப்மேன் குறிப்பிட்டுள்ளார். முன்பை விட ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வெளியீட்டில் இது மிகவும் தெளிவாகத் தெரிகிறது எனவும், இது பிக்சல் போன்களுக்கும் பிற ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இடையிலான தெளிவான பிரிவைக் காட்டுகிறது என்பதை தெளிவாக்கியுள்ளார்.

சாம்சங் பயனர்கள் இதை மிகவும் மோசமான செய்தியாகவே பார்க்கின்றனர். பலரும் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான One UI 7.0 இயங்குதளத்தைப் பயன்படுத்தி பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் காத்திருக்கின்றனர்.

ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான One UI 7.0 அப்டேட் கிடைக்கும் சாம்சங் கேல்க்சி போன்கள் எவை என்பதை கீழ்வருமாறுக் காணலாம்.

கேலக்சி எஸ் சீரிஸ் (Samsung S Series):

android 15 eligible samsung phones
ஆண்ட்ராய்டு 15 அப்டேட் கிடைக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. (ETV Bharat Tamil Nadu)
  • கேலக்சி எஸ்24 அல்ட்ரா (Galaxy S24 Ultra)
  • கேலக்சி எஸ்24+
  • கேலக்சி எஸ்24
  • கேலக்சி எஸ்23 அல்ட்ரா (Galaxy S23 Ultra)
  • கேலக்சி எஸ்23+
  • கேலக்சி எஸ்23
  • கேலக்சி எஸ்23 FE
  • கேலக்சி எஸ்22 அல்ட்ரா (Galaxy S22 Ultra)
  • கேலக்சி எஸ்22+
  • கேலக்சி எஸ்22
  • கேலக்சி எஸ்21 FE
  • கேலக்சி எஸ்21 அல்ட்ரா (Galaxy S21 Ultra)
  • கேலக்சி எஸ்21+
  • கேலக்சி எஸ்21

Galaxy Z series

  • கேலக்சி Z ஃபோல்டு 6 (Galaxy Z Fold 6)
  • கேலக்சி Z ஃபோல்டு 5
  • கேலக்சி Z ஃபிளிப் 6 (Galaxy Z Flip 6)
  • கேலக்சி Z ஃபிளிப் 5
  • கேலக்சி Z ஃபோல்டு 4
  • கேலக்சி Z ஃபிளிப் 4
  • கேலக்சி Z ஃபோல்டு 3
  • கேலக்சி Z ஃபிளிப் 4

கேலக்சி ஏ சீரிஸ் (Galaxy A series)

  • கேலக்சி ஏ73 (Galaxy A73)
  • கேலக்சி ஏ55
  • கேலக்சி ஏ54
  • கேலக்சி ஏ53
  • கேலக்சி ஏ35
  • கேலக்சி ஏ34
  • கேலக்சி ஏ33
  • கேலக்சி ஏ25
  • கேலக்சி ஏ24
  • கேலக்சி ஏ23
  • கேலக்சி ஏ15 (LTE+5G)
  • கேலக்சி ஏ14 (LTE+5G)

கேலக்சி டேப் சீரிஸ் (Galaxy Tab series)

  • கேலக்சி டேப் எஸ்9 FE+ (Galaxy Tab S9 FE+)
  • கேலக்சி டேப் எஸ்9 FE
  • கேலக்சி டேப் எஸ்9 அல்ட்ரா (Wi-Fi/5G)
  • கேலக்சி டேப் எஸ்9+ (Wi-Fi/5G)
  • கேலக்சி டேப் எஸ்9 (Wi-Fi/5G)
  • கேலக்சி டேப் எஸ்8 அல்ட்ரா (Wi-Fi/5G)
  • கேலக்சி டேப் எஸ்8+ (Wi-Fi/5G)
  • கேலக்சி டேப் எஸ்8 (Wi-Fi/5G)

கேலக்சி எஃப் சீரிஸ் (Galaxy F series)

  • கேலக்சி எஃப்55 (Galaxy F55)
  • Galaxy F54
  • Galaxy F34
  • Galaxy F15

கேலக்சி எம் சீரிஸ் (Galaxy M series)

  • கேலக்சி எம்55 (Galaxy M55)
  • கேலக்சி எம்54
  • கேலக்சி எம்34
  • கேலக்சி எம்53
  • கேலக்சி எம்33
  • கேலக்சி எம்15

தொழில்நுட்பம் சார்ந்த அண்மை செய்திகளுக்கு ஈடிவி பாரத் தமிழ்நாடு 'டெக்னாலஜி' பக்கத்துடன் இணைந்திருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.