சென்னை: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் ஒரு கார் பிரியர் என்பதும், அவரிடம் விலை குறைந்த கார் முதல் விலையுயர்ந்த கார்கள் பலவும் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக, 2012ஆம் ஆண்டு விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்று சில ஆண்டுகளுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்து, அந்த பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது இன்றளவும் பேசப்படுகிறது.
இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பு விஜய்க்கு பிரச்னையாக அமைந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை விற்பனை செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக, தற்போது விஜயின் வீட்டிலிருந்து சொகுசு கார் ஒன்று வெளியில் வருவது போன்ற வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த கார் குறித்த தகவல்களை அறிவதில் கார் பிரியர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்படி அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் படி விஜய் வாங்கியுள்ள கார் தான் லெக்சஸ் எல்எம் 350எச் (Lexus LM 350h) என்ற எம்பிவி வகை சொகுசு கார்.
Lexus LM 350h: இந்தியாவில் தற்போது மிகவும் அதிக விலையில் விற்பனை செய்யப்படும் எம்பிவி வகையைச் சேர்ந்த கார் என்றால் அது இந்த லெக்சஸ் எல்எம் 350எச் தான். டொயோட்டா நிறுவனத்தினுடையதே இந்த லெக்சஸ், டொயோட்டா நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகுசு கார்களை லெக்சஸ் பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.
வேரியண்ட்: இந்த லெக்சஸ் எல்எம் 350எச் எம்பிவி காரானது 7 சீட்டர் விஐபி (LM 350h 7-Seater VIP) மற்றும் 4 சீட்டர் அல்ட்ரா லக்சுரி (LM 350h 4-Seater Ultra Luxury) என இரண்டு வேரியண்ட்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 4 சீட்டர் வேரியண்ட் தான் அதிக சொகுசானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 7 சீட்டர் வேரியண்டானது 3 வரிசை சீட்களைக் கொண்டிருக்கும் நிலையில், 4 சீட்டர் வேரியண்டானது வெறும் இரண்டு வரிசை சீட்களை மட்டுமே கொண்டுள்ளது. அதுவும் இரண்டாவது வரிசையில் இரண்டு சொகுசு கேப்டன் சீட்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மற்றபடி, இரண்டு வேரியண்டுகளுக்குமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பியூச்சர்ஸ்களே கொடுக்கப்பட்டுள்ளது.
இன்டீரியர் வசதிகள்: 4 சீட்டர் வேரியண்டில் முன்வரிசை இருக்கைகளையும், பின்வரிசை இருக்கைகளையும் பிரிக்கும் வகையில் ஒரு தடுப்பு இடம்பெற்றுள்ளது. இந்தத் தடுப்பானது பின்வரிசை இருக்கையில் இருப்பவர்களுக்கு தனிமையுடன் கூடிய சொகுசு பயண அனுபவத்தைக் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில், 48 இன்ச் அல்ட்ராவைடு ஸ்கிரீன் கொண்டுள்ளது. அதை ரிமூவ் செய்ய ரியரில் மல்டி ஆப்ரேஷன் பேனல், அட்வான்ஸ் இன்ஃப்ராரேட் மேட்ரிக்ஸ் சென்சார் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம், குளிர்சாதனப் பெட்டி, 64 கலர் இன்டீரியர் இலுமுனேசன், அம்பர்லா ஸ்டாண்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
சிறப்பம்சங்கள் நிறைந்த இருக்கைகள்: 4 பேர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்யக்கூடிய வேரியண்ட் காரில் ஏர்லைன் ஸ்டைல் ரிக்லைனர் சீட்ஸ், மஸாஜிங், வெண்டிலேஷன் மற்றும் ஹீட்டிங் வசதிகளைக் கொண்ட ஒட்டோமான் சீட்ஸ் மற்றும் ஃபுட்ரெஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளன. இதுமட்டுமல்லாது, 4 ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் டெம்பரேச்சர், லைட் மற்றும் 5 மோடுகளில் (Mode) போஸ்சர் கண்ட்ரோல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பொழுதுபோக்கு அம்சங்கள்: கேப்டன் ஏரியாவில் பயணம் செய்பவர்களின் பொழுதுபோக்கிற்காக 35.5 செ.மீ அகலமான டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, 21 மி.மீ மல்டிமீடியா சிஸ்டம், 121.9 செ.மீ அல்ட்ராவைடு டிஸ்ப்ளே மற்றும் 23 ஸ்பீக்கர்களுடன் கூடிய மார்க் லெவின்சன் ரெஃபரன்ஸ் 3D சரவுண்டு சவுண்டு சிஸ்டம் ஆகிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்: சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் எம்பிவி கார்களிலேயே மிகவும் பாதுகாப்பான எம்பிவி கார் என இதனைச் சொல்லலாம். அந்த வகையில், இந்தக் காரில் பிரி-கலிசன் சிஸ்டம் (PCS), லேன் டிப்பர்சூர் அலர்ட் (LDA), டைனிமிக் ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல் (DRCC), அடாப்டிவ் ஹை-பீம் சிஸ்டம் (AHS), சேஃப் எக்ஸிட் அசிஸ்ட், லேன் டிராக்கிங் அசிஸ்ட் (LTA), ஆட்டோமேட்டிக் ஹை-பீம், பிளைண்டு ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட் சிஸ்டம் என ஏராளமான பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
என்ஜின்: லெக்சஸ் எல்எம் 350எச் காரின் இரண்டு வேரியண்டுகளும் 2.5 லிட்டர் ஃபோர் சிலிண்டர் பெட்ரோல் குயட் ஹைப்ரிட் என்ஜின்னை பெற்றுள்ளது. இது 190bhp மற்றும் 242Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. மேலும், இது இ ஃபோர் ஆல் வீல் டிரைவ் தொழில்நுட்பம் மூலம் தனது நான்கு வீல்களுக்கும் பவரை அனுப்புகிறது. இதன் காரணமாக இந்த காரில் பயணிக்கும்போது மென்மையான மற்றும் அமைதியான பயணத்தை அனுபவிக்க இயழும் என்பது குப்பிடத்தகுந்த சிறப்பம்சமாகும்.
விலை: இந்தியாவில் இந்த லெக்சஸ் எல்எம் 350எச் எம்பிவி வகை சொகுசு காரானது 7 சீட்டர் வேரியண்ட்டின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2 கோடியாகவும், அதுவே 4 சீட்டர் அல்ட்ரா லக்சுரி வேரியண்ட்டின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2.5 கோடியாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: இது காரா இல்ல கப்பலா? TATA Curvv SUV Coupe ஸ்பெஷல் என்ன? முழு விவரம்!